விவசாயி

0
1013

தரிசு நிலம் தனில்
அரிசு மணிகளிட்டு
பரிசு கிடைக்கு மென்றவாவில்
மரிசு மடிதனில் உறங்கிக்கிடக்கிறான்
அவன் எரிசுடர் ஏற்றிவிட்டு
திரிசுடர் ஒளிகாணும்
பெருசு
அவன் கண்களுக்கு
பரிசு
கிடைப்ப தென்னவோ பெரிசு
அம்மணமாய் கிடந்த
தரிசில் ஆடைகள்
உடுவித்து அழகு பார்க்க எத்தனித்தவன்
மனசில் நித்தமும் துரிசு சூழும்
இடுப்படி கிரிசும்
கீறும் மொத்தமாய்
கரிசு புனைந்தவனாய் பெருசு
அவன் சிரசு களைந்து
பித்தனாய்
பேதனாய் – இரவில்
பேயாக அலையும் சீதனாய்
கிறுக்கு பிடித்து
அரளி விதையுண்டு இறந்து கிடப்பான்
ஏர் பிடித்து
உழுது முடித்து
உணவாக்கித்தரும் அவனுக்கு
இதைவிட விட வேறுவழியில்லை
எடுத்தெரித்து
அவன் செயல் குறித்து
அனுதாபம் கொள்ளும் அரக்கர்கள்
அவன் வலி உணர்வதில்லை…!
உணர்ந்ததில்லை…!
இனி உணரப்போவதுமில்லை…!

விளக்கச் சொற்கள்

மரிசு – வரம்பு
தரிசு – பயிர் செய்யாத நிலம்
துரிசு – துன்பம்
கிரிசு – குறுவாள்
கரிசு – பாவம்
சீதன் – சந்திரன்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments