அது சைவப் பூனை!!!

0
339

பாலருந்தும் – அது ஊண் பிரித்த உதிரத்தின் உதிர்வென்றெண்ணாது..

களிவளர் முட்டையின் கருவுண்ணும் – அது கலந்த இனிப்புண்ணும்..

புலால் மறுத்துப் புராணம் பேசும் – உதாரணம் நூறு காட்டும்..

கொலைத் தொழில் கூடாதென கலை நிகழ்த்தும் -அத்தொடு எலி பல துரத்தும்…

கடிக்கும் கொசுவினை அடித்துக் கொல்லும் – பூச்சி இனத்தை மிதித்தழிக்கும்…

சீனியில் ஒளிந்த எறும்பை உருக்கித் – தேநீராய்ச் சுவைத்துப் பருகும்.

வள்ளுவன் புலால் மறுப்புக்கும் முன்னே சொன்னது கொல்லாமையென்று அறிந்திடாத,

சைவப்பூனை -ஆம்   அ(து)சைவப்பூனையாம்..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments