அத்திமரம்

0
2021
  • பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது அத்தி. அத்தி  மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர்.
  • விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.
  • அத்தி மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி , வெள்ளை அத்தி , நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

சங்ககாலத்தில் இந்த மரத்தின் பெயர் அதவம். தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அத்தி மரத்தில் செய்யப்பட்ட விஷ்ணு சிலை இன்றைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் 12 வருடத்திற்கு ஒருமுறை இழுப்பது என்பது உள்ளது.

அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு.

Cluster Fig Tree
  • அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும்.
  • அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன.

இரத்த உற்பத்தி அதிகரிக்கும்

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments