அந்திமந்தாரை (Mirabilis Jalapa)

0
3857

அந்திமந்தாரை (Mirabilis jalapa)  என்பது அந்தி நேரத்தில் பூக்கும் பூவைக் கொண்ட தாவரம் ஆகும். இதனால் இம்மலர் நாலு மணிப்பூ (FOUR O’ CLOCK FLOWER) எனவும் அழைக்கப்படுகிறது. நிக்டாஜினேசியே (Nyctaginaceae) குடும்பத்தைச் சேர்ந்த   இச்செடி பத்திராட்சைப்பூ, சந்தியாமல்லி, சாயங்காலமல்லி, என பல பெயர்களில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அழைக்கப்படுகின்றது.

தென்அமெரிக்காவைச் சேர்ந்த  இச்செடி  இயற்கையாகவே உலகெங்கும் பரவி வளர்கிறது. மிராபிலிஸ் என்பது லத்தீனமொழியில் அற்புதம் எனப்பொருள்படும். இந்த தாவரம் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் அற்புதச்செடியாகும். பலநிறப்பூக்களைக்கொண்ட சிற்றினங்களில் ஒவ்வொரு தனிப்பூவிலுமே பல நிறங்கள் கலந்திருக்கும். கலவையான நிறங்கள் பட்டைகளாகவோ, திவலைகளகவோ அல்லது புள்ளிகளாகவோ காணப்படும்

ஒரே செடியின் பூக்களிலேயெ நிறவேறுபாடு பலவகையில் காணப்படும். சில மஞ்சள் வண்ண் மலர்கள்  மலர்ந்த பின்னர் இளஞ்சிவப்பாகவும், வெள்ளை மலர்கள் ஊதாவாகவும்  மாறும் அதிசயமும் இதில் உண்டு.

அதிகபட்சமாக  1 அடி உயரம் வளரும் இச்செடி அதிக கிளைகளுடன் அடர்ந்து வளரும்.  தண்டின்  சதைப்பிடிப்பான கணுக்களில் இலைகள் எதிரடுக்கில் முட்டை வடிவில் கூர்நுனியுடன் இருக்கும். புனல் வடிவ மலர்கள் கொத்தாக காணப்படும்.ஒருவருடத்தில் பூத்து காய்ந்து அழியும் வகைச் செடியானாலும் மண்ணிற்கடியிலிருக்கும் கிழங்குகளிருந்து    மீண்டும்  புதிய     செடி முளைத்து  வளரும்.

ஒற்றை விதை உள்ள குருமிளகு போன்ற கருப்பு நிற உலர்பழங்கள் சுருக்கங்களுடன் இருக்கும் நச்சுத்தன்மை கொண்ட விதைகளிலிருந்தும்  இவை இனப்பெருக்கம் செய்கின்றன. சூரியஒளியில் செழித்து வளரும் இவை வறட்சியைத்தாங்கி வளரும்.

 பலநாடுகளில் பலமொழிகளிலும் இது இரவு ராணியென்று அழைக்கப்படும் இவற்றின்  மலர்களிலிருந்து இரவு முழுதும் நறுமணம் வீசிக்கொண்டிருப்பதால் இதனை அழகுச்செடியாகவும் பலர் வீட்டில் வளர்க்கிறார்கள்.இம்மலர்களிலிருந்து  எடுக்கப்படும் வண்ணங்களை துணிகளுக்கு  இயற்கைச் சாயமேற்றவும்  கேக் ,பிஸ்கட் போன்ற உணவுப்பொருள்களில் பக்க விளைவுகளில்லா நிறமேற்றவும் பயன்படுத்துகின்றனர்.

கொப்புளங்களையும், காயங்களையும் வீக்கங்களையும் இலைச்சாறு குணமாக்கும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments