அனர்த்த முகாமைத்துவம்

0
10287

மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்பம் முதல் இன்று வரை வௌ;வேறு சந்தர்ப்பங்களில் மனித வாழ்கைக்கு சவாலாக அமையும் பல்வேறு நிகழ்வுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அந்தவகையில் அனர்த்தங்களினால் ஏற்படக் கூடிய சவால் பாரியதொன்றாக காணப்படுகின்றது. அனர்த்தமானது 2 வகைப்படுகின்றது.

01. இயற்கை அனர்த்தங்கள்
02. மனித செயற்பாடுகளினால் ஏற்படும் அனர்த்தங்கள்

இயற்கை அனர்த்தங்கள் என்பது புவியிலும் அதன் அயற்சூழலிலும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பான நிலையே இயற்கை அனர்த்தமாகும். மனிதத் தலையீடின்றி இயற்கைச் சூழலில் நிகழும் பல்வேறு மாற்றங்களினால் இயற்கையாக ஏற்படும் செயற்பாட்டால் மனிதனுக்கும் அவனது சொத்துக்கும் பாதிப்புக்கள் எற்படுமாயின் அவற்றை இயற்கை அனர்த்தங்கள் எனலாம்.

இவை 2 வகைப்படுகின்றன:

01. புவியினுள் நிகழும் பௌதீகச் செயற்பாடுகள்
Example: சுனாமி,புவியதிர்வு,புவியசைவு,நிலச்சரிவு
02. காலநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள்
Example: வெள்ளப்பெருக்கு,வரட்சி,சூறாவளி,இடிமின்னல்,காட்டுத்தீ

அனர்த்த முகாமைத்துவம் என்பது, ‘பூமியை தமது வாழிடமாகக் கொண்ட மனிதன் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இயற்கை நிகழ்வுகளை (இயற்கை இடர்கள்,அனர்த்தங்களை) பூமியில் முழுதாக நிறுத்தவோ தடுக்கவோ முடியாது விட்டாலும், பூமியில் அனர்த்தங்கள் ஏற்படும் வலயங்கள், காலங்கள், அளவுகள், எண்ணிக்கைகள் என்பவற்றை மரபுரீதியான முறைகள்,நவீன நுட்ப முறைகள் என்பவற்றை பயன்படுத்தி இயற்கை நிகழ்வுகளின் நிலைமைகளுக்கு ஏற்ப அவற்றினால் ஏற்படும் தாக்கம், பாதிப்புக்களை குறைத்து தவிர்க்கக் கூடிய வகையில் முகாமை செய்யலாம்.’ இதனையே அனர்த்த முகாமைத்துவம் எனலாம்.

உண்மையில் அனர்த்த முகாமைத்துவம் என்பது, நிலையான அபிவிருத்தி, இயற்கை வள முகாமை,மக்கள் பங்கேற்பு முகாமை, வலுவூட்டல் அணுகுமுறை, சூழல் தாக்க மதிப்பீடு, வளிமண்டல பொதுச் சுற்றோட்டம், தகட்டோட்டுக் கொள்கை, எரிமலைச் செயற்பாடு என்பவற்றை அனுசரித்த ஒரு விடயமாகவும் குறிப்பிட்ட சில கூறுகளைக் கொண்ட ஒரு முகாமைத்துவ முறையாகவும் காணப்படுகின்றது. இம்முறையில் அண்மைக் காலங்களில் வேறுபட்ட புவியியல் முப்பரிமாணப்படங்கள்,செய்மதிப் படங்கள,; பிரதேச ரீதியான இடர்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் (நில நடுக்க, எரிமலை, சூறாவளி, வெள்ள, நிலச்சரிவு வலயப் படங்கள்) என்பன பயன்படுத்தப்பட்டு வருவதுடன், GIS மற்றும் RS படங்கள் மற்றும் அவைசார் படங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அனர்த்த முகாமைத்துவமானது 3 பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது.

01. அனர்த்தத்திற்கு முன்னரான முகாமை
02. அனர்த்தம் நிகழும் போதான முகாமை
03. அனர்த்தத்திற்கு பின்னரான முகாமை

அனர்த்த முகாமையில் குறிப்பாக பிரதேச ரீதியாகவும், கால ரீதியாகவும் ஒப்பீட்டளவில் சார்பற்ற இடரொன்று ஏற்படும் நிலையில் அதனால் கடந்தகால, எதிர்கால நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஏற்படும் அதிர்ச்சிகள், தாக்கங்கள், ஆபத்துக்கள், பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்காமல் தவிர்த்தல் அல்லது தப்பித்துக் கொள்ளுதல் அல்லது முன்கூட்டியே தெரிந்திருக்கும் அனர்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகைகளை செய்த நிலையில் இருத்தல் என்பன அனர்த்தத்திற்கு முன்னரான முகாமை ஆகும்.

திடீரென இடருக்கு முகம் கொடுக்க நேர்ந்தால் தானும், முடியுமான அளவு தன்னைச் சுற்றியுள்ள உயிர்களையும் காப்பாற்றிக் கொண்டு, அதிமுக்கியமான சொத்துக்களையும் பாதுகாத்துக் கொண்டு அனர்த்த ஆபத்திலிருந்து இயலுமானவரை பாதுகாப்பாக முகம் கொடுப்பதே அனர்த்தத்திற்கு நிகழும் போதான முகாமை எனப்படுகிறது.

அனர்த்தத்தால் ஏற்படும் அழிவுகள் பாரதூரமான நிலைக்குச் செல்லாமல் சகல அம்சங்களையும் பாதுகாத்துக் கொண்டு மீட்சி அடையக் கூடிய நிலையே அனர்த்தத்திற்கு பின்னரான முகாமை ஆகும்.

இத்தகைய அனர்த்தத்தினை முகாமைத்துவம் செய்வதற்கு பல்வேறு சமுக நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. அத்தகைய சமுக நிறுவனங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்

01. குடும்பம்
02. மதம்
03. அரசாங்கம்
04. அரச சார்பற்ற நிறுவனங்கள்
05. ஊடகங்கள்
06. பாடசாலை
07. சிவில் சமுகம் என்பனவற்றை குறிப்பிடலாம்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments