குத்தென்ற பார்வையில்
குவிந்திருந்த அத்தனை நீரும்
கன்னத்தை தழுவியோடுகையில்
நெஞ்சத்தில் பொதிந்த
பொக்கிஷ நினைவலை
எட்ட நின்று
காட்சி தந்தது…
திருமண பந்தத்தின் பின்
கருவொன்று சுமந்து
கடினத்துடன் பெற்றெடுத்து
கனியாக்கி காயாக்க
அவள் வாழ்வு,
கன்றின் காலத்தில்
கரியாகிய
கலங்கிய அலைகள் அது…
அவளும் அகிலம் போற்றும்
அற்புத அன்னையாயினும்
ஈர் கண் ஒன்றித்து
இளம் பூவாய் போதித்த
இவள் மகனை
இன்னொருவள்
கை பிடிக்கச் செய்து
கஷ்டம் பல கண்டாளே…
அத்தையோர் அன்னையென்று
புரியா மருமகள்
அவளாயிற்றே…
மணம் புரிந்து
மாதம் கடந்து
தமையன்
மனையாள் கன்றீன்ற
பேரன் கை தழுவ முன்
வந்தடைத்து விட்டாளே
வயோதிபர் இல்லத்துக்கு…
ஆசையாய் வளர்த்த மகனை
அருமை பாராட்ட
அவள் கொண்ட பாக்கியம்
அவ்வளவு தானோ…
அன்னையின்
பாத அடி சொர்க்கம் தொலைத்து
பூமியில் தேடும்
இன்பம் எதுவோ…??