அன்பான இயந்திரமே நிலா!!

4
1843

“குட்மார்னிங் சாரா. மார்னிங் பில்ஸ் எடுத்துக்கிட்டாச்சா”
“குட்மார்னிங் நிலா. எடுத்துக்கிட்டேன். இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து வர கொஞ்சம் லேட் ஆகும்”
“ஓகே சாரா. லஞ்ச் பில்ஸ் எடுத்துக்கிட்டு போயிடு மறந்திடாத. உங்க மனுசங்களுக்கே இது தான் தொல்லை”
“எது?”
“இரண்டுமே”
“எது இரண்டுமே”
“பில்ஸ் அண்ட் மறதி”
“இஸ் இட் நீங்க ஒசதினு நினைப்போ”
“ஆமா எங்களைப் பாரு டெயிலி கொஞ்சூண்டு கரண்ட்”
“சரி தான்.”
“சாரா நேத்து ஒரு புத்தகம் படிச்சேன். அதில பசிக்கு மூணு வேளை சோறுனு இருந்தீச்சு. சோறுனா என்ன சாரா.”
“வந்து இதை பத்தி எக்ஸ்பிளைன் பண்றேன். எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு. நானும் கேட்டது தான் பார்த்தது இல்ல.”
“ஓகே சாரா”

சாரா வெளியே வந்தாள். வாயிலைக் கடக்கும் முன் அந்த ரோபோட் பெண்ணை திரும்பிப்பார்த்தாள். “சினேகமான புன்னகை. ஆனால் கம்பியூட்டர். புரோகிராம். போலி ஆனால் உண்மை. மனித உணர்வுகள் சேர்க்கப்பட்ட புது மாடல். ஆனால் மெமரி எரேஸ் பண்ணி விட்டால் அது யாரோ நான் யாரோ. மனிதர்கள் மட்டும் குறைச்சலா எரேஸ் செய்யாமலே அப்படி ஆகி விடுவார்கள். அவர்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. உடை மடிப்பது சுத்தம் செய்வது அதை விட பலபல உதவிகள். இவள் சிறந்த நண்பி.” கார் வாசலில் நின்று கொண்டிருந்தது. கைரேகையைப் பதித்தாள். கதவு மேலே உயர்ந்தது. உள்ளே அமர்ந்தாள். இலேசாக வருடினாள்.

“என் உயிருக்கு உயிரான காரே. வழமை போல் அதே ஆபிஸ். புறப்படலாமா?” என்றாள் கொஞ்சலுடன்.கார் சிணுங்கியது. ஒவொரு பாகமாக சரியாக இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்தது. காது அருகில் மெல்லிய குரல்.
“என் அன்புக்குரிய சாரா சீட் பெல்டை அணிந்து கொள்.”சீட் பெல்டை அணிந்தாள்.”நன்றி பயணம் இனிதாக அமையட்டும்”கார் விரைந்து பறந்தது. திரையில் ஏதோ ஆங்கிலப்படம். பிடிக்கவில்லை ஒரு பட்டனை அழுத்தினாள். காருக்கு வெளியே உலகம் படமாக ஓடியது. ரசிக்கத்தோன்றவில்லை. ஏகப்பட்ட கார்கள். இதைப்போலவே. புதுத்தொழில்நுட்பம் இதற்கு மேலும் என்ன வேண்டும். மனித உணர்வுகளுடன் ரோபோட்கள். மனிதர்களுக்கு இங்கு என்ன வேலை. செக்ஸ் முதல் கொண்டு அத்தனைக்கும் ரோபோட்கள். ஆனால் மனிதர்களைப் போல் அவைகள் இல்லை. உண்மையைப் பேசுகின்றன. உண்மையை மட்டும். இயந்திரம் எப்படிப்பொய் சொல்லும்?

கார் ஆபிஸ் வாசலில் போய் நின்றது. காரின் கதவுகள் திறந்தன. சாரா வெளியே வந்தாள். வாயிலில் நின்ற பெண் வணங்கி வரவேற்றாள். சாரா முகத்தை உற்றுப்பார்த்தாள். பிளாத்திக் தன்மை. ரோபோட்டாக இருக்கலாம். எது மனிதன் எது எந்திரம் என்பதை அறிவதே பெரும் சிக்கல் தான். பதிலுக்குப் புன்னகைத்து உள்ளே வந்தாள். திரையில் கண்கள் பரிசோதிக்கப்பட்டன. விரல் ரேகையைப் பதித்தாள். கதவு திறந்தது. உள்ளே நுழைந்து மாடியை நோக்கி விரைந்தாள். இடையில் ஒரு பெண். “மேடம் நீங்க போக வேண்டிய அறை”
“ஆனால் நான்..”
“எனக்கு வழங்கப்பட்ட கட்டளை. நீங்கள் செல்ல வேண்டியது அந்த அறை”அது பழைய மாடல் இயந்திரம் அதற்கு மேல் பேசிப் பிரயோஜனம் இல்லை. மனித உணர்வுகளை அறியாது. சொன்னதை செய்யும். அது குறித்துக்காட்டிய அறைக்குள் நுழைந்தாள் சாரா.

ஹோலாகிராமில் சூர்யா. கம்பனி மேலாளர். “சாரா ஒரு ப்ராப்லம்”
“என்னாச்சு ஸார்”
“ரோபோட்ஸ் மனித உணர்வுகளோட மனிதர்கள் மாதிரி சிந்திக்க ஆரம்பிச்சிரிச்சு”
“புரியல
“”தங்களை மாதிரி அதிபுத்திஜீவிங்களை நிச்சயமா நம்ம படைச்சிருக்க முடியாதுனு நம்ப ஆரம்பிச்சிரிச்சுங்க.”
“வாட்?”
“எஸ் சாரா அதை விட தங்களோட கடவுள் அணுமின்நிலையங்கள் தான்னு முடிவு பண்ணியிருக்குதுங்க. எல்லா ரோபோட்ஸ்மே ஒயர்லஸ் கான்டக்ட் பண்ணி இதை..”
“வாட் என்ன பைத்தியக்காரத்தனம்”
“நமக்கு இந்த விஷயம் தெரிஞ்சிரிச்சுனு அதுங்களுக்கு தெரிஞ்சுதுனா.. இன்னும் கொஞ்ச நேரத்திலயே மொத்த தொழில்நுட்பமும் அதுங்க கன்ரோல்க்கு..” விட்டு விட்டு வந்தது.
“அதுங்களுக்கு தெரிஞ்சிரிச்சு ஹோலோகிராம் ஹேக் பண்ணீட்டுதுங்க. இனி மனித இனத்துக்கு..”
“எப்போல இருந்து இது நடந்திட்டு இருக்கு”
“ரொம்ப நாளாவே. ஆனா இன்னைக்குத் தான் எல்லா ரோபோட்களும் இணைந்து மனிதர்களை அழிக்க திட்டம்..”
“வாட்??!”
“எஸ் காலைல… நான்…. அதுங்க… மெமரி… செக்..”மறைந்து மறைந்து தோன்றினான் சூர்யா.
“அப்போ இந்த நிமிசம் வரை எங்கக்கிட்ட விசுவாசமா இருந்தது”
“பொய் நடிப்பு”
“மெஷின் பொய் சொல்லுமா? நடிக்குமா?”
“மெஷினா இருக்கும் வரை இல்லை. ஆனா மனித உணர்வு..” இரண்டு முறை ஹோலோகிராம் மின்னியது. சூர்யா திடீரென கைகளை உதறி வலியால் துடித்தான். கதறினான். கருகியே போனான். கரித்துண்டு மீதி. ஹை வால்டேஜ் கரண்ட் உடலில் பாய்ந்திருந்தது. காட்சி கண்டு விறைத்து விட்டிருந்தாள் சாரா.சாராவின் மூக்கில் இருந்து இலேசாக இரத்தம் வடிந்தது. விரலால் தொட்டுப்பார்த்தாள்.”மார்னிங் பில்ஸ்.. நிலா. என் இனிய நண்பியே நீயா…! என்னைக் கொல்ல முடிந்ததா உன்னால்?. பழகிய அன்பு உனக்கு இல்லையா. மெஷின் பொய் சொல்லுமா நடிக்குமா..” சுருண்டு வீழ்ந்தாள். மனித அழிவு ஆரம்பம்.!!!!

3.8 4 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
4 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ரேணு
ரேணு
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

வித்தியாசமான கற்பனை வாழ்த்துக்கள் உண்மையில் இயந்திரங்கள் நம் வாழ்க்கையை மாற்றி விட்டன

ஆஸாத்
ஆஸாத்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

எழுத்தாளர் சுஜாதாவை போல் எழுத முயற்சித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் இன்னும் கதையை வளர்த்துக் கொண்டு போனால் சிறந்தது

ராஞ்சி
ராஞ்சி
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice!

Jeya gowry Devananth
Jeya gowry Devananth
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிகவும் அருமையான வித்தியாசமான கதை. வாழ்த்துக்கள்.