தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கடந்த வாரம் சீன நிறுவனமான ஹூவாய் உட்பட சில வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா வர்த்தக தடை விதித்தது. இதனையடுத்து ஹூவாய் போன்களில் கூகுளின் அப்டேட்களும், சில செயலிகளும் செயல்படாது என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.
ஆண்டிராய்ட் பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் சேவைகள் இல்லையென்றால் ஹூவாய் நிறுவனம் கடும் பாதிப்படையும் என்று கூறப்பட்ட நிலையில், அவை இல்லாமலேயே சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்றும், இதனால் தங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஹூவாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹுவாவெய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சென் செங்ஃபெய் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “அமெரிக்காவிடமிருந்து உட்பொருள் கட்டுப்பாட்டை ஓராண்டுக்கு முன்பு நாங்கள் பெற்றோம். ஹுவாய் 5ஜி தொழில்நுட்பத்தின் செயல்திறன் மீது நம்பிக்கை உண்டு. கட்டுப்பாடுகள் எதுவும் ஹுவாய்யின் 5ஜியைக் கட்டுப்படுத்திவிட முடியாது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வேறெந்த நிறுவனங்களாலும் ஹுவாய்யின் 5ஜி தொழில்நுட்பத்தை அடைய முடியாது என்று ஊகிக்கிறேன் என்றார்.
இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும்.
திறந்த மூலத்தில் (Open Source) இருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.
அமெரிக்க வர்த்தக துறை தற்காலிக அனுமதி வழங்கியதன் மூலம் சில நிறுவனங்கள் ஹூவாவே நெட்வோர்க் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
அமெரிக்காவின் தடை தங்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஏற்கனவே தங்களது சொந்த தயாரிப்புகளை மேம்படுத்திவிட்டதாகவும் ஹூவாய் நிறுவனத்தின் சிஇஓ ரென் தெரிவித்தார்.
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்