அம்மாவின் அழகிய நினைவுகள்

0
1437
20200725_131345

 

 

 

 

தாயின் அழகிய நினைவுகள் இல்லாமல் போனவர்கள் உண்டா???
அவள் அன்பில் நனையாமல் விட்டுப் போன எவரேனும் உண்டா???

அவளின் கருவறையில் உதைத்த உதை
வதைத்த வதை எல்லாம் பொறுத்த
பூமாதேவி அவள்…

பூமிக்கு வந்த பின்னர்
என்னை நெஞ்சில் சுமந்து
பாராட்டி சீராட்டி வளர்த்தவள்

கண்கண்ட காட்சி எல்லாம்
கதையாகச் சொல்லி ஆசானாக இருந்தவள்

என்னை அணைத்து உறங்க வைத்தவள்

தாய் மடியில் தலைசாய்க்க
நோய்கள் எல்லாம் மறைந்திடும்

கனிந்த முகம் மாறாமல்
புது ஆடைகளை வாங்கித்
தரும் உள்ளம் கொண்டவள்

அம்மா அடித்தால் கொஞ்ச நேரம் தான் வலி இருக்கும்
அதில் நம் வாழ்வை மேம்படுத்த பல வழி இருக்கும்

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments