அறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்? சியோமி 100MP என்ன ஆனது?

0
3874

கடந்த மே மாதத்தில் தனது புதிய 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஒன்றை அறிமுகப்படுத்திய பின்னர், சாம்சங் நிறுவனம் இன்று அதன் புதிய 108 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கான உலகின் முதல் 108 மெகாபிக்சல் கேமரா சென்சாரான இதை, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியுடன் இணைந்து சாம்சங் உருவாக்கியுள்ளது. முன்னதாக, நிறுவனத்தின் 64-megapixel ISOCELL GW1 sensor-ஐ உருவாக்க இந்த இரு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

100 மில்லியனுக்கும் அதிகமான பிக்சல்களுக்கு நன்றி!

இந்த புதிய மற்றும் சக்திவாய்ந்த சென்சார் ஆனது ஸ்மார்ட்போன் பயனர்களை மிகச் சிறந்த புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கும் என்று சாம்சங் நம்புகிறது. அதாவது, மிகவும் பிரகாசமான ஒளி நிலைமைகளில் கூட, இந்த சென்சாரால் சிறந்த புகைப்படங்களை உருவாக்க முடியும் என்றும், அதற்கு இதன் 100 மில்லியனுக்கும் அதிகமான பிக்சல்கள் துணையாக இருக்குமென்றும் சாம்சங் தெரிவித்துள்ளது.

டெட்ராசெல் டெக்னாலஜி மற்றும் ஸ்மார்ட் ஐஎஸ்ஓ!

சாம்சங், நான்கு பிக்சல்களை ஒன்றாக இணைக்கும் தனது தொழில்நுட்பமான Tetracell technology-ஐ இதில் பயன்படுத்தி உள்ளது. இது குறைந்த ஒளி நிலையில் கூட சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவும். இதற்காக சாம்சங்கின் நிறுவனத்தின் Smart-ISO பொறிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. உடன் வண்ணங்களை மேம்படுத்தும் Minis noise தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் எந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும்?

சாம்சங் தனது புதிய ISOCELL Bright HMX sensor-ன் வெகுஜன உற்பத்தியை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த புதிய சென்சாரை பயன்படுத்தும் முதல் நிறுவனமாக சியோமி இருக்கும் என்பதும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஏற்கனவே சாம்சங்கின் புதிய 108 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை டீஸ் செய்ய தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

64எம்பி கேமரா ஸ்மார்ட்போன்கள் என்னவாகிற்று?

சியோமி இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், அதன் 64 மெகாபிக்சல் கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதைப்போல ரியல்மி மற்றும் சாம்சங் நிறுவனமும் கூட, அதன் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணியில் தீவீரமாக ஈடுபட்டுள்ளன.

வலை பகிர்வு
நன்றி சமயம்.காம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments