அவல் – பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை (Flattened rice Moong Dhal kozhukattai)

0
1741

தேவையான பொருட்கள்:

ரவையாக பொடித்த கெட்டி அவல் – ஒரு கப்

வேகவைத்த பாசிப்பருப்பு – கால் கப்

உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு

தாளிக்க : தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்

கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்

சிறிய பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்)

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

வேகவைத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு

Moong Dhal kozhukattai
 
Moong Dhal kozhukattai

செய்முறை:

  • ரவையாக பொடித்த அவலை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை கப் வெந்நீர் தெளித்து நன்கு பிசறி வைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வெந்த பாசிப்பருப்பு, பிசறிய அவல் சேர்த்து கெட்டியாகக் கிளறி எடுக்கவும்.
  • ஆறிய பின் உருண்டை / நீளவாக்கில் உருட்டி 5 – 7 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுத்து, விருப்பமான சட்னியுடன் பரிமாறவும். அவல் எளிதில் ஜீரணம் ஆகும். இந்த பிடிகொழுகட்டை விரத நாட்களுக்கு ஏற்றது.

நன்மைகள்: வயிற்று வலி தீரும் உடலுக்கு வலிமை உண்டாகும். புளி சேர்த்து உண்டால் பித்த நோய் குணமாகும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments