அன்பே
இரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதே
இந்த நொடி நகராமல் என்னை கொல்ல
இதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதே
வார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதே
கடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்க
சேவலும் கூவாமல் உறங்கி விட்டதே
அலைபேசிக்கும் என் இரகசியம் புரியாமல்
அவஸ்தைகள் தருகின்றதே
கனவுகளிளும் உன் நினைவு வாட்டுதே
எப்போது நம் சந்திப்பு சிந்தித்தே எண்ணங்கள் கோலமிட
சுகமான உறக்கத்தினை உன்னால் தொலைத்தேனே
அன்பே எல்லாம் காதல் போட்ட கோலமிது என்று
வெட்கத்தில் கன்னம் சிவக்க அக இருள் கலைந்ததே
என் அவஸ்தைகள் ரணமானதே
இருளே நீ அறியாமலா என்னை உருக வைத்தாய்
கதிரவனே உன் வரவு ஏன் தாமதம்
என்னை ஏன் கலங்க வைத்தாய்..?
காதலும் அவஸ்தைகள் தரும் நோய்தானோ
என்னை படாய் படுத்த வந்த வினைதானோ
புரியாமல் தவிக்கிறேன் அவஸ்தையே கொஞ்சம் ஓய்வெடு































உயிர்காதலும் அவஸ்தைதான்.அருமை