தேவையான பொருட்கள்:
அவல் – ஒரு கப்
ஏலக்காய் – 2
சர்க்கரை – சுவைக்கு ஏற்ப
வறுத்த முந்திரி, தேங்காய் – தேவைக்கு ஏற்ப
நன்மைகள்: உடல் பலம் பெறும். அரிசி அன்னத்தை விட அவலால் வலிவு அதிகம் உண்டாகும். அவலை வேக வைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிவதுடன் சீதபேதி போன்ற நோய்களுக்கு நல்லது.
செய்முறை:
-
அவலை மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் உடைத்து எடுக்கவும். ஏலக்காய், சர்க்கரை சேர்த்து இடித்து வைக்கவும். உடைத்த அவலை இட்லி தட்டில் ஈரத்துணியில் வைத்து உதிராக வரும் வரையில் ஆவியில் வேக வைக்கவும்.
-
பின்பு தேங்காய், சர்க்கரைக் கலவை, பொடித்த அவல், முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான எளிமையாக செய்யக் கூடிய அவல் புட்டு ரெடி.