ஆசிரியர் தினம்….

0
1202

 

 

 

அகர முதல் சொல்லித் தந்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..
அடக்கம் தனை அறிய வைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..
ஆசை தீர வாழ்த்துகிறோம் உங்கள் புகழையே!!!!…

ஈன்ற தாயைப் போல நாங்கள் மதிப்போம் உம்மையே!!!!..
உண்மைதனை எடுத்துரைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!…
ஊர் கேட்க  சொல்லிடுவோம்  உங்கள் பெருமையே!!!!..

எண் கணிதத்தை கற்றளித்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..
எளிமைதனை எமக்களித்த எங்கள் அன்பின் ஆசானே!!!!…
ஏற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே!!!!..

எத்தனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
எல்லாம் எமக்காக தானே!!!!..

உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை – நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்

எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறத்தானே!!!!…

இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ் காலங்களில் வாழ்த்தாத நாளில்லை!!!!..

ஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..
ஐயங்களை நீக்கி வைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..
ஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே!!!!..
ஓர்குலம் நாமெல்லாம்  என்றுரைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!…
ஔவை போல கற்று தெளிந்தோம் நாம் உங்கள் வழியிலே!!!!..

எந்நாளும் உமைப் போற்றிடுவோம்….
இருந்தாலும், இரட்டிப்பு வாழ்த்துக்கள் இந்நாளிலே!!!!…

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments