ஆட்டம்காட்டும் அண்டங்காக்கைகள்

0
501
ad67030ca80340456e5f77e46bc064d7

 

 

 

 

ஒரு
முகத்தின்
முகவரி தேடி

தலையை ஒருக்களிக்கும்
ஓரவிழிப் பார்வையில்
கவனம் சிதறாமல்
மனசெங்கும் உக்கிரம்

முன்னோர் ஜாடயை
முதுகில் சுமந்தபடி
வெறிபிடித்து
விரக்தியில்
ஆலாய்ப் பறக்குது

புனித தசைகளில் ஊறும்
ரத்தச்சுனையை ருசிக்க
ஜாதகசித்திரம் புறட்டுது
கொத்திக் கிழிக்கும்
தன்
கூரிய அலகில்…

மஞ்சள்நிறம் தேடும்
மதிகெட்ட காக்கை
மூக்கறுபட்டும்

இன்னும்,

குயிலின்
இதயத் தித்திப்பை
எண்ணி ஏங்கியபடி
குசலம் விசாரிக்குது

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments