ஆண்களுக்கான முடி உதிர்தலைக் குறைப்பதற்கான 20 வழிகள் (20 Ways to reduce hair loss in men)

0
2356

முடி உதிர்தல் என்பது உலகளவில் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இப்பிரச்சினையானது மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை பாதிக்கிறது. சுமாரா ஒருவர் ஒரு நாளில் 100முடிகளை இழக்கிறார். முடி உதிர்தல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். எனவே ஒரு சில முடிகள் விழுந்துவிடுவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. முடி உதிர்தலுக்கு உணவு, தாதுப் பற்றாக்குறை, மருந்துகள், மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மரபியல் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.  தொப்பி அல்லது ஹெல்மெட் போடுவது ஆண்களுக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். முடி உதிர்தலைக் குறைக்க அல்லது சமாளிக்க உதவும் 20 தீர்வுகளை பார்க்கலாம்.

லேசான ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியை தவறாமல் கழுவ வேண்டும் (Regularly wash your hair with mild shampoo)

முடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் முடி உதிர்தலைத் தடுக்க முடியும். அவ்வாறு செய்வதால், முடி உதிர்வதற்கு வழிவகுக்கும் தொற்று மற்றும் பொடுகு அபாயமானது குறைக்கப்படுகின்றது. மேலும், சுத்தமாக இருப்பது உங்கள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

முடி உதிர்தலுக்கு வைட்டமின் (Vitamin for hair loss)

வைட்டமின்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆரோக்கியமானவை மட்டுமல்லஇ உங்கள் தலைமுடிக்கும் நல்லது. வைட்டமின் ஏ (vitamin A) உச்சந்தலையில் முடியின் வளர்ச்சியை, ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றதுஇ வைட்டமின் ஈ (vitamin E) உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்திஇ மயிர்க்கால்களின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய செய்ய உதவுகிறது மற்றும் வைட்டமின் பி (vitamin B) முடியின் இயற்கையான, ஆரோக்கியமான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.

புரத உணவுகளை அதிகம் உட்கொள்ளவும் (Enrich diet with protein)

இறைச்சிகள், மீன், சோயா அல்லது பிற புரதங்களை சாப்பிடுவது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவுகிறது

.

அத்தியாவசிய எண்ணெய்களுடன் உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள் (Scalp massage with essential oils)

சிறிது காலமாக முடி உதிர்தலை அனுபவிப்பவர்கள் அத்தியாவசிய எண்ணெயுடன் உச்சந்தலையில் ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் மயிர்க்கால்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. இதற்காக நீங்கள் பாதாம் அல்லது எள் எண்ணெயில் லாவெண்டர் சேர்த்து பயன்படுத்தலாம்.

ஈரமான முடியை சீவுவதைத் தவிர்க்கவும் (Avoid brushing wet hair)

முடி ஈரமாக இருக்கும்போது ​​அது அதன் பலவீனமான நிலையில் இருக்கும். எனவே ஈரமான முடியை அதிகம் துவட்டுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த நிலையில் முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால் நீங்கள் ஈரமான முடியை சீவ வேண்டும் என்றால்இ மிகவும் பரந்த பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்துங்கள். தலைமுடியை அடிக்கடி சீவுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவ்வாறு செய்வது முடியைக் காயப்படுத்துவதோடு முடி உதிர்தலையும் அதிகரிக்கும். தலை பயிர்ச்சிக்கல்களைச் சரிசெய்ய சீப்பினை விட உங்கள் விரல்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

பூண்டு சாறு, வெங்காய சாறு அல்லது இஞ்சி சாறு (Garlic juice, onion juice or ginger juice)

இந்த சாறுகளில் ஒன்றை உங்கள் உச்சந்தலையில் இரவில் தூங்கும் முன்னர் தேய்த்து விட்டு காலையில் குளியுங்கள். ஒரு வாரத்திற்கு இதனை தவறாமல் செய்து பாருங்கள். மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

உங்களை குளிர்ச்சியாக வைத்திருங்கள் (Keep yourself hydrated)

ஹேர் ஷாஃப்ட் ஆனது கால் பங்கு நீரைக் கொண்டுள்ளது. எனவே ஒரு நாளில் குறைந்தது நான்கு முதல் எட்டு கப் தண்ணீரைக் குடியுங்கள். இது உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பபேதடு முடி ஆரோக்கியமாக வளரவும் உதவும்.

உங்கள் தலைமுடியில் க்ரீன் டீ தேய்க்கவும் (Rub green tea into your hair)

க்ரீன் டீயினைத் தலை முடியில் தேய்ப்பதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு கப் தண்ணீரில் இரண்டு பை (bags) க்ரீன் டீயை (Green Tea) காய்ச்சி அதனை குளிரச் செய்யுங்கள். அதன் பிறகு அதனை உங்கள் தலைமுடியில் தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியை நன்கு நீரில் கழுவிக்கொள்ளுங்கள். அல்லது தலைக்குக் குளியுங்கள். இதன் முடிவுகளைக் காண ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இதை தவறாமல் பயிற்சி செய்து பாருங்கள். சிறந்த பலனை உணர்வீர்கள்.

முடிக்கு எது கெட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள் (Know what is bad for hair)

நீங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால்இ அவற்றை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் ஈரமான தலைமுடியை ஒரு துண்டுடன் (towel) தேய்ப்பதைத் தவிர்க்கவும். மாறாக, முடியை இயற்கையாகவே உலர விடுங்கள்.

  

ஆல்கஹால் பானங்கள் குறைக்க (Reduce Alcoholic Beverages)

நீங்கள் மதுப்பழக்கம் உள்ளவராயின் அது உங்கள் முடி வளர்ச்சியை பாதிக்கும். எனவே முடி வளர்ச்சியை அதிகரிக்க நினைத்தால் ஆல்கஹால் அருந்துவதைத்தவிருங்கள். அல்லது குறைத்துக்கொள்ளுங்கள்.

புகைப்பதைத் தவிர்க்கவும் (Avoid Smoking)

சிகரெட் புகைப்பதால் உச்சந்தலையில் பாயும் ரத்தத்தின் அளவு குறைகிறது, இதனால் முடி வளர்ச்சி குறைகிறது.

உடல் செயல்பாடு (Physical activity)

ஒவ்வொரு நாளும் உடல் செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடைபயிற்சி, நீச்சல் செய்வதானது ஹார்மோன் அளவை சமப்படுத்த உதவுகிறது. மேலும், முடி உதிர்தலைக் குறைப்பதோடு மன அழுத்த அளவையும் குறைக்கிறது.

டி-மன அழுத்தம் (De-Stress)

முடி உதிர்தலுடன் மன அழுத்தத்தை இணைப்பதற்கான மருத்துவ ஆதாரங்களை கடந்த கால ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உங்களை நீங்களே அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கான வழிகளில் ஒன்று தியானம் செய்வதாகும். தியானம் மற்றும் யோகா போன்ற மாற்று சிகிச்சைகள் மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல் ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்கின்றன

நிலையான வெப்பமாக்கல் மற்றும் உலர்த்துவதைத் தவிர்க்கவும் (Avoid Constant heating & drying)

உங்கள் தலைமுடியை அடிக்கடி, நிலையான வெப்பமாக்கல் (Hair Heating) மற்றும் உலர்த்தும் (Hair Drying) நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டாம்.வெப்பமானது முடி புரதங்களை பலவீனப்படுத்துகிறது. மேலும் தொடர்ந்து வெப்பமடைதல் மற்றும் உலர்த்துவது  பலவீனத்திற்கு வழிவகுக்கும். இது முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

உங்கள் தலையில் வியர்வை படியாதவாறு வைத்திருங்கள் (Keep your head sweat free)

எண்ணெய் முடி கொண்ட ஆண்கள் வியர்வை காரணமாக கோடையில் தலை பொடுகு, மற்றும் முடி உதிர்வதற்கான வாய்ப்புகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். இதற்காக நீங்கள் கற்றாழை மற்றும் வேப்பம் கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்த முடியும். இது தலையை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு மற்றும் பொடுகுத் தன்மையையும் குறைக்கும்.

மேலும்இ ஹெல்மெட் அணியும் ஆண்கள் கோடையில் பெரிய முடி உதிர்தலை அனுபவிக்கின்றனர். துளைகளில் வியர்வை குவிந்து முடி வேர்களை பலவீனப்படுத்துவதால் ஆண்களில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. எனவே உங்கள் தலைமுடிக்கு மேல் டெர்ரி துணி தலைக்கவசம் அணிவதால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

உங்கள் தலைமுடியை நீங்கள் எப்படி ஸ்டைல் ​​செய்கிறீர்கள் என்பதை மாற்றவும் (நீண்ட முடி கொண்ட ஆண்களுக்கு) – (Change how you style your hair (for men with long hair))

நீங்கள் அண்மைக்காலமாக உங்கள் முடியை இழக்கிறீர்கள் என்றால், உங்கள் தலைமுடியை இறுக்கமான ஸ்டைலிலிருந்து சற்று தளர்த்த வேண்டும். போனிடெயில்ஸ், ஜடை மற்றும் செயற்கை சிகை அலங்காரங்கள் போன்ற சிகை அலங்காரங்கள் முடியை, மயிர்க்கால்களை இழுக்கின்றன. இவை இறுதியில் உங்களுக்கு வழுக்கையை ஏற்படுத்தும்

உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் (Take care of your health)

உடல்நலப் பிரச்சினைகள் முடி உதிர்தலுக்கு காரணமாகின்றன. ஆரோக்கியமான முடியினை விரும்புபவராயின் உங்களுக்கு நாள்பட்ட நோய்கள், அதிக காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் காணப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மருந்துகள் குறித்து ஒரு கண்காணிப்பு வைத்திருங்கள் (Keep a watch on medication)

சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவற்றில் ஒன்று முடி உதிர்தல். நீங்கள் உள்ளெடுக்கும் மருந்து முடி உதிர்தலை ஏற்படுத்துகிறதா என்பதை வைத்தியருக்குத் தெரியப்படுத்துங்கள். அப்படியானால், மருந்துகளை மாற்றித்தரும்படி அவரிடம் கேளுங்கள்.

ரசாயனங்களிலிருந்து விலகி இருங்கள் (Keep away from chemicals)

கடுமையான இரசாயனங்கள் மற்றும் நிரந்தர முடி வண்ண பொருட்கள் (Hair Coloring) முடி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் முடி உதிர்தலை அனுபவிக்கும் போது, ​​உங்கள் தலைமுடிக்கு வண்ணம் போட வேண்டாம். 

டாக்டர்களுடன் சந்திப்புகளை தவறாமல் திட்டமிடுங்கள் (Schedule appointments with doctors regularly)

பல சுகாதார நிலைமைகளும் முடி உதிர்வு பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். குறிப்பாக தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏதும் இருப்பின் அவை ஹார்மோன் சமநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் இதனால் இவை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு ஏதும் நோய்கள் காணப்பட்டால் அது பற்றி ஒரு வைத்தியரோடு கலந்துரையாடுங்கள்.அதுவே சிறந்தது.

(Data courtesy: Dr S Sareen, Member of Asian association of hair restoration surgeon, Dr Sareen Hair Clinic)

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments