ஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்

0
867

இணைய உலகில் முதல் இடத்தில் இருக்கும் பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன்மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்மார்ட்போன் செயல்பாட்டுக்குப் பெருமளவில் உதவி வருகிறது ஆண்ட்ராய்ட் மென்பொருள். இதனை தன்னுடைய வளர்ச்சிக்காக  தவறுதலாக பயன்படுத்தியதற்காக ஐரோப்பிய யூனியன் ரூ.3.42 லட்சம் கோடி அபராதம் விதித்துள்ளது. சர்வதேச அளவில் தேடுதல் தளத்தில் முதலிடத்தில் உள்ளது கூகுள் .இது ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களிடமும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஆண்ட்ராய்ட் செயலியைப் போலவே கூகுள் ஆண்ட்ராய்ட் செயலியை உருவாக்கிக் கொண்டதாக புகார் எழுந்தது.

ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது. கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.

கூகுள் முதலில் தனது போட்டியாளர்களின் இணையதளங்களில் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது. பின்னர் அவர்களிடம் கூகுளில் குறைந்த எண்ணிக்கையில் விளம்பரங்கள் வெளியிட மிகவும் லாபகரமான இடம் ஒதுக்குவதற்கு முன்பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.

இந்த புகார் குறித்து, மூன்றாண்டுகளாக விசாரணை நடந்துவந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் வழக்கை தொடங்கியுள்ளது. கமிஷன் விசாரணை முடிக்க ஒரு வருடம் எடுக்கப்படும், பின்னர் கூகிள் நிர்வாகிகள் CCI ( Competition Commission of India )க்கு முன்பாக வரவழைக்கப்படும்.கூகுள் குற்றவாளி எனில், நிறுவனம் அதன் இந்திய வருவாயில் 10% அல்லது அதன் நிகர இலாபத்தில் 300% அபராதம் விதிக்க படும்.கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டை தவறாகப் பயன்படுத்துவதை 90 நாட்களுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும். ஏற்கெனவே முறைகேடாகப் பயன்படுத்தியதுக்கு 5.06 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும். தன்னுடைய போட்டியாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். இணையத்தில் பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறிய நிறுவனங்களை பாதிக்காத வகையில் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது ஐரோப்பிய யூனியன்.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments