ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது அதன்படி ஆப்பிளின் ஐபோன், மேக், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி உள்ளிட்ட சாதனங்களுக்கான ஐஓஎஸ் அப்டேட் மற்றும் டிவி ஒஎஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் அந்நிறுவனம் வழங்கியுள்ள வசதிகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆப்பிள் டிவி யூடியூப் சேனல் தொடங்கியது. இந்த யூடியூப் சேனலில் பொழுதுபோக்கு, சினிமா டிரெய்லர், பிரபலங்கள் பேட்டி உட்பட பல்வேறு வீடியோக்கள் தரவேறப்படுள்ளன.அதை அடுத்து தற்பொழுது ஆப்பிள் டிவி ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் வழங்கும் சேனல்கள் மற்றும் இதில் 100,000 க்கும் அதிகமான படங்களின் பட்டியல் மற்றும் திரைப்படங்களை கண்டறிய உதவுகிறது.
இந்த புதிய இயங்குதளத்தின் சிறப்பம்சங்களாக ஏர்பிளே 2 செயல்படுத்தப்பட்ட டிவிகளுக்கான ஆதரவுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஆப்பிள் டிவி பயன்பாட்டை கொண்டுள்ளது.
ஏர்பிளே 2
இப்போது உங்கள் ஐபோன் மற்றும் ஐபாட் ஆகியவற்றை நேரடியாக உங்கள் ஏர்பிளே 2 செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிவிக்கு வீடியோக்கள், புகைப்படங்கள், இசை மற்றும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
முதலில் சாம்சங் ஸ்மார்ட் டிவியில் தற்போது இந்த புதிய ஆப்பிள் டிவி பயன்பாடு 100 நாடுகளில் கிடைக்கும் என்று கூறுகிறது, ஏர் பிளே 2 ஆதரவு 176 நாடுகளில் வழங்கப்படுகிறது.மற்ற ஸ்மார்ட் டிவி தயாரிப்பாளர்கள் சோனி, எல்ஜி மற்றும் விஜியோ உள்ளிட்டோர் ஏர்ப்ளே 2 மற்றும் ஆப்பிள் டிவி ஆப் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ள ஐஓஎஸ் இயங்குதளத்தை சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) பகுதியில் சென்று டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இத்துடன் புதிய இயங்குதள அப்டேட் டவுன்லோடு செய்யும் முன் உங்களதுஅனைத்து தரவுகளை பேக்கப் செய்து கொள்ள வேண்டியது அவசியம் .
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்