ஆவாரை (Senna-auriculata)

0
2733

மூலிகையின் பெயர்: ஆவாரை

 மருத்துவப்  பயன்கள்: பூக்களைக் காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம். இதுவும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். அதிக பயன் தரும்.

பயன்படுத்தும் முறைகள்:

  • வேர், இலைகள், பூக்கள், பட்டைகள், காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.
  • ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் உட்கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் என்ற கணக்கில் சாப்பிட வேண்டும்.
  • 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

ஆவாரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகினால்  மதுமேகம் உடையவருக்குக் காணும் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல்  குணமாகும்.

சருமவியாதி, மூகத்தினால் வரும் வியாதிகள் அனைத்தயும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம்.

Senna auriculata (aavarai)

சர்க்கரை குறையும்: பூவை இனிப்புடன் கிளறி ஹல்வா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments