இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 10)

0
1284
 *பகுதி 10* 
 
கணவன் தன் மனைவி கஷ்டப்படுகிறாளே என்று கூற அவளோ
“என்னங்க இதுல கஷ்டம் இருக்கு. இன்டகு நம்ம கேம்ல நான் விண் பண்ணிடன். அதோட சேர்த்து காலையுணவையும் செஞ்சிட்டன். அவ்வளவு தான். இதுல எனக்கு சுகம்தான். ஒரு கணவன் வேலைக்குப் போகும் போது அவனுக்கு வாய்க்கு ருசியா சமச்சி கொடுத்து அவன் போற வரைக்கும் அவன கவனிச்சி அனுப்புறத விட வேறென்ன வேல இருக்கும் ஒரு பெண்ணுக்கு”. என கணவனுக்கே பாடம் எடுக்க அதனைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான் ராஜேஷ்.  
 
பதிலுக்கு அவன் இல்ல பவி [ தன் மனைவி மீது அன்பு கூடும் போது பவி, செல்லம், மை டியர், டா என தன் மனைவியை அழைப்பான் ராஜேஷ் ] இல்லடா…. நேத்து தூங்கவே ரொம்ப லேட்டாகிடிசா அதான் சொன்னன். என்று ராஜேஷ் இலகிய குறளில் கூறினான். நிலைமையை மாற்ற நினைத்த பவித்ரா 
 
“என்னப் பத்தி என்ன நினச்சிங்க ராஜேஷ்,  நீங்க வேலைக்குப் போனத்துக்கப்றம் எனக்கு என்ன வேல ராஜேஷ். நான் நிம்மதியா தூங்குவன்” எனக் கூறி அவளுக்கே செந்தமான ஸ்டைலில் நகைத்தாள்.
[ இவ தான்க உண்மையான மனைவி, என்ன வாசகர்களே நான் சொல்றது சரி தானே ]
 
பின் ” சரிங்க உங்களுக்கு டைம் ஆகுது நீங்க போய் ரெடியாகுங்க நான் இத க்ளீன் பண்ணிட்டு வாரன்” . என்று கூறி  அவனை அனுப்பி விட்டாள்.
 [இவ்வாறு இவர்கள் பேசும் இறுதித் தருணம் இது தானே அது தெரியாமல் இப்படி அனுப்பி விட்டாள் பவித்ரா. கணவன் பேசும் போது இதற்குத் தான் இடையில தடை போடக் கூடாது என்று சொல்லுவாங்களோ என்னமோ ஹ்ம்….. யார் அறிவார். சரி நாம கதைக்குப் போவோம்.]
 ரெடியாகி வந்தவுடன் அவனை இன்முகத்துடன் வழியனுப்பி வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் ராஜாவை பார்க்கச் சென்றாள் பவித்ரா.
 
நேற்றய தினத்தை விட இன்று கணவன் தாமதமாகியே வீடு வந்தான். ஆனால் இடையில் ஒரு போன் போட்டு நான் இன்றைக்கு லேட்டாகித்தான் வருவேன். நான் வருவதற்குத் தாமதமாகுமென்றால் ராஜாவிற்க்கு உணவினைக் கொடுத்து நீயும் உண்டு விடு என்று தன் மனைவியிடம் கூறினான். ஆனால் இவள் ராஜாவிற்கு மாத்திரம் உணவினைக் கொடுத்து விட்டு அவனைத் தூங்க வைத்து விட்டு கணவனுக்காகக் காத்திருந்தாள்.
 
பகல் முழுவதும் வேலை செய்த களைப்பில் வந்த அவனிடம் பேச்செதுவும் கொடுக்காது அவனுக்குரிய பணிவிடையினைச் செய்தாள் பவித்ரா. இரவு உணவினை உண்ட இருவரும் ஓர் இரு வார்த்தைகள் பேசிவிட்டுத் தூங்கச் சென்றனர். மறு நாள் காலையில் இந்திரன் உஷையின் நெற்றியில் பொட்டு வைக்கும் முன்பே (சூரியன் உதிக்கும் நேரம் வருதற்கு முன்பே) எழுந்த ராஜேஷைக் கண்டு பவித்ரா எழுந்து விட 
“நீ தூங்கு டா,  எனக்கு இன்டைக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு. அதான் நான் ஏர்லியா போகனும்” என்று கூற 
” இது என் வரம்…..” என்று கூறிக் கொண்டே அவனுடன் சேர்ந்து எழுந்தாள் பவித்ரா.
 
நாட்கள் இவ்வாறே நகர்ந்து கொண்டிருக்க ராஜேஷ் முன்னரைவிட நேரத்துடன் எழுந்து கம்பெனி செல்வதும் இரவு நேரம் தாழ்த்தியே வீடுவருவதும் என்ற நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது. பல சமயம் ராஜா மற்றும் பவித்ரா தூங்கியிருந்ததுமுண்டு. 
 
ஓர் நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணியாகியும் வீடு வராத கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. ஆனால் அவனோ வெளியில் இருந்த ஒரு மீட்டிங்கை முடித்து விட்டு அங்கேயே இரவு உணவினை முடித்து விட்டுவந்திருந்தான். மனைவி தனக்காக உண்ணாமல் உறங்காமல் விளித்திருப்பதைக் கண்ட அவனுக்கு இப்போது அவள் மீது கோபமே வந்துவிட 
“இனிமேல் எனக்காக வேண்டி சாப்பிடாமல் இருந்து விடாதே! நீ சாப்பிட்டு விட்டுத் தூங்கலாம். நான் வந்தால் எனக்கு எடுத்து சாப்பிடத் தெரியும் நான் சாப்பிட்டுக் கொள்வேன் ” 
என்று கூறி தனது அறையினை நோக்கிச் சென்றவன் சற்று தனது நடையினைத் தளர்த்தி 
” இனிமே எனக்காக வேண்டி நீ நேரத்துடன் எழுந்திருக்கக் கூடாது ” என்று கூறிவிட்டுச் செல்ல அங்கே அவள் கூறிய சமாளிப்புக்கள் அனைத்தும்  தோற்று அவள் கண்ணீர் மட்டுமே எஞ்சியது.
 
[ என்ன செய்வது? இதே பிரச்சின எல்லா குடும்பதுலயும் இருக்கில்ல. லேசில இறங்கமாட்டோம் இறங்கினால் பிஸிமேன் ஆகாம விடமாட்டோம் என்று கூறும் ஆண்களின் மனோ நிலையா? அல்லது கணவனின் அருகாமையினை மட்டும் எதிர்பார்க்கும் மனோ நிலையா? இதற்குக் காரணம். இது தொடருமா? இல்லை இவர்களிடையே பிரச்சினை வருமா?  என்ன நடக்கும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் ]
 
தொடரும்…
 
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments