இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 11)

0
1006
 *பகுதி  11* 
 
அவனது இந்த முயற்சிப் பயணத்தின் ஆறாவது மாதமும் வந்தது. அதில் அவனே இன்வெஸ்மன்ட் பண்ணி ப்ரொடக்ட் பண்ணுமளவிற்கு வளர்ந்திருந்தான். ஆனால் அவன் கம்பெனியோ அவனை விடுவதாக இல்லை என்று கூறியிருக்க தனக்கென தனியான ஒரு கம்பெனியினை உருவாக்கிவிட்டு அதிலும் பங்குதாரராய் இணைந்தான்.
 
பின் வந்த நாட்களில் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை என பல கம்பெனிகள் அந்த ஊரிலும் வெளி ஊர்களிலும் திறந்து வைக்கப்பட்டன. அந்த அளவு அவன் முயற்சியும் கடின உழைப்பும் வலுவாக இருந்தது. இதன் பின்னே திருமணமான ஆரம்பத்தில் இவர்கள் பொருளாதாரப் பிரச்சினையால் வாடியதைக் கண்டும் உதவாது ஓடிவிட்ட உறவுகள் ஒட்டுறவு வைத்தால் எமக்கு ஏதும் ஆகும் என்று இவர்களின் உறவினைத் தேடி வந்தனர்.
 
ஒரு சில வருடங்கள் சென்ற பின் அவன் கம்பெனிகள் வெளிநாடுகளுக்கும் பரவிச் சென்றன. அவன் ஒரு முறை பவித்ராவிடம் கூறியிருந்தான் அல்லவா? என்னைப் பார்ப்பதென்றால் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டுமென்று அது போன்றே அவன் பிஸியாகி விட்டான். 
 
ஆனால் அவன் குடும்பத்திற்கு மாத்திரம் வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒதுக்குவான். அதற்கான ஏற்பாடு ஒவ்வொரு வாரத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும். அந்த மணி நேரத்தில் அவனுடைய அனைத்து வேலைகளையும் அவனுடைய பீஏ விடம் ஒப்படைத்து விட்டு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் அவர்களின் பழய வீட்டிற்குச் சென்று விடுவார்கள்.
 
 [பழைய வீடு என்பது நாம் கதையின் ஆரம்பத்தில் பார்த்த வீடே. பின் நகரத்திற்கு மத்தியில் ஒரு மாளிகை போன்ற ஓர் வீடு கட்டப்பட்டு அங்கு வந்து விட்டனர் இவர்கள்] 
அந்த ஒரு மணிநேரத்தில் ராஜாவிடமும் பவித்ராவிடமும் பேசுவதற்கான நிறைய விடயங்கள் இருந்தன. அதை அனைத்தையும் பேசி முடிப்பான் ராஜேஷ். பவித்ராவும் அந்த நாளுக்காய் தவமாய் தவமிருப்பாள். ஆனால் ராஜேஷின் முயற்சியும் உழைப்பும் கூடியதே ஒழிய குறையவில்லை. 
 
தொடரும்….
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments