*பகுதி 04*
சற்று நேரம் கழித்து தளர்ந்த நடையுன் முகத்தில் வெறுமையின் ரேகைகள் படர வீட்டிற்கு வந்தடைந்தான் ராஜேஷ். கணவனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா அவனிடம் ஓடி வந்து சந்தோஷமான செய்தியைக் கேட்டறிந்து கொள்ளலாம் என்றிருந்தாள். எனினும் கணவனின் வருகையையும் அவன் நிலையையும் பார்த்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட அவள் வழக்கம் போல அவரை வரவேற்று அவர் கையில் இருந்த பைல்களை வாங்கி எதுவுமே பேசாமல் உள்ளே அழைத்துச் சென்றாள்.
உள்ளே சென்ற அவன் எதுவுமே பேசாமல் வாழைக்கன்றின் அடியை வெட்டினால் அது எவ்வாறு சரிந்து வீழுமோ அவ்வாறே அங்கிருந்த இருக்கையில் சரிந்து வீழ்ந்தான். தன் கணவனை ஆறுதல் படுத்தும் முகமாக ஜாடியில் இருந்த தண்ணீரை குவளை ஒன்றில் ஊற்றி அவன் குடித்து முடிக்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
ஹ்ம்…… அன்பான மனைவியிடம் எத்தனை நேரத்திற்குத்தான் நடிக்க முடியும். அதனால் அவனை மீறி வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் ஹா….. ஹா…… என்று வாய்விட்டு சிரித்தான் ராஜேஷ். தனது கணவனின் தீடீர் மாற்றத்தினை கண்ட அவள் பேய் அறைந்தவள் போன்று அவனைப் பார்க்க, அவளின் தோல்களைப் பிடித்து ஓர் ஆட்டு ஆட்டியவன்
” என்னம்மா! மை டியர் அரசி. என்ன அப்படி பாக்குற? என்று கேள்வியுடன் ஆரம்பித்தான் ராஜேஷ்.
[ ஏன் ஆரம்பத்துல ஏதோ இழந்தவன் மாதிரி வந்தவன் பின் திடீர் என்று சிரித்தான். நடித்ததாக வேறு நான் சொல்லி இருந்தேன். உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கும் என்று எனக்கும் தெரியும் வாசகர்களே! எனினும் அடுத்த பகுதியில் அதற்கான தெளிவு பெறுவது இன்னும் சுகம் அதனால் அது ஏன் என்று அடுத்த பகுதியில் தருகிறேன்.]
தொடரும்…