இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 03)

0
1248

 *பகுதி 03* 

இனிய காலைப்பொழுதும் புலர்ந்தது. இது இவர்களின் நல்வாழ்விற்கான ஆரம்பம் என்பது போல என்றுமில்லாத உற்சாகத்தினைத் தந்தது அவர்கள் அனைருக்கும் . [ அட நம்ம குட்டி இளவரசன் கூட எழுந்து ஜம் என்டு இருக்காரு என்டாப் பாருங்க]
 
பல கனவுகள் முட்டி மோதவே அக் கனவுலகத்தில் இருந்த படியே இன்ட்றவியூ செல்வதற்காக வேண்டி தயாராகிக் கொண்டிருந்தான் ராஜேஷ். ராஜேஷ் அதிகளவு கடவுள் நம்பிக்ககை இல்லாதவன். அதிஷ்டம், சிறந்த தோழமை, அன்பான உள்ளங்களின் நல்லறிவுரை, கடின உழைப்பு, அதற்கான பக்குவத்தினைத் தரும் காலமும் நேரமுமே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிப்பவை என்ற எண்ணம் கொண்டவன். பொதுவாக இவனை அரை நாஸ்தீகன் என்று சொல்லலாம். திருமணத்தின் பின் அவன் மாற்றிக் கொள்ளாத மாற்றிக் கொள்ள நினைக்காத ஒன்றாக இது மட்டுமே இருந்து. 
 
அதனால் 
பூஜை அறையில் அவனுக்காக வேண்டி சாமி கும்புட்டுவிட்டு  இருந்து வெளியே வந்த பவித்ரா விபுதியை ராஜேஷுக்கு வைத்துவிட 
ராஜா “அம்மா!  எனக்கு….. ” என்றபடியே குட்டி ஸ்பைடர் மேன் போல் வந்து நிற்க
பவித்ரா 
” என் குட்டி இளவரசனுக்கு இல்லாததா? “
 என்று சிரித்துக் கொண்டே அவனுக்கும் விபுதியை வைத்து விட்டு பூஜையறையில் இருந்த பைல்ஸை எடுத்து 
” ஆல் த பெஸ்ட் மை டியர்! ” 
என்று கூறிக் கொண்டே அதே புன்னகை மாறாத முகத்துடன் ராஜேஷிடம் கொடுத்தாள். இடையே ராஜாவும் 
” ஆல் த பெஸ்ட் மை டாட்!  “
 என்று அவனது மழழை மொழியில் கூறினான். 
 
 இருவரின் வாழ்த்தை பெற்றுக் கொண்ட அவன் ஓர் வெற்றிப் புன்னகை புன்னகைத்து விட்டு 
” தெங்ஸ் பவி, தெங்ஸ் டா மை டியர் செல்லம்! . தெங் யூ ஓல் ” என்று கூறி விட்டு வெளியே வர அவர்கள் இருவரும் அவன் பின்னே வந்து அவனை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே சென்றனர்.
 
அந்திப் பொழுதை அடைந்திருந்தும் கணவன் வீடு வந்து சேராததால் சற்றுக் கலக்கமடைந்த பவித்ரா மேற்கொண்டு என்ன செய்வது என்று அறியாது வீட்டின் வாயிலை நோக்கிப் பார்ப்பவளாக இருந்திருந்தாலும் அவள் உள்ளம் மட்டும் முடிவு நல்லதாகவே அமையும் என்று கூறிக் கொண்டே இருந்தது.
 
தொடரும்…
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments