இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 07)

0
946
*பகுதி 07* 
 
அவள் கொடுத்த சக்கரையை அவன் அப்படி மென்று முழுங்கக் காரணம் அதில் பாதியளவு உப்பு சேர்க்கப்பட்டமையே ஆகும். [ இவர்கள் சிறந்த கணவன் மனைவி மட்டுமல்லாது அதையும் தாண்டி சிறந்த நண்பர்களாகவும் இருந்தனர்.அதனாலேயே மனைவியின் இந்த விளையாட்டினை ஏற்றுக் கொண்டான் ராஜேஷ்.]
 
எவ்வாறோ அதை சுவைத்து முடித்த அவன் 
“என் பொன்டாட்டி என்டா என் பொன்டாட்டி தான்”
என்று கூறிவிட்டு அவளின் கைகளைப் பிடித்தாவாறே நின்று கொண்டிருந்த அவளை உட்கார வைத்து விட்டு
“பாருடா எனக்கு மட்டும் இந்த ஆடர் சக்ஸஸ் ஆயிடென்டு வெச்சிக்கோ பிறகு நீ எங்கிட்ட பேசுர என்டாக் கூட என்கிட்ட ரெண்டு நாளைக்கு முன்னாடியே டைம் எடுத்துப் பேச வேண்டி வரும். அப்புறம் ஐயாவ அம்மனி புடிக்கவே முடியாது. ரொம்பவே பிஸியாகிடுவன் என்று ராஜேஷ் எதிர்காலக் கனவுகளுடன் கூற அவள் முகம் சட்டென்று மாறி கண்களில் இருந்து ஓர் ஈர் நீர்த்துளிகள் கூட வந்து விட்டது. 
 
இதனைக் கண்ட ராஜேஷ் அவளின் அருகே வந்து அவள் கண்களில் இருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு “நான் சொன்னதுக்காக இப்படியா அழுறது. நான் சும்மா சொன்னன் மா. உன் கூட டைம் ஸ்பென்ட் பன்றத விட வேற என்ன வேல இருக்கு எனக்கு. உன்ன கல்யாணம் பன்னுறதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தன் தெரியுமா? ” என்று தனது கடந்த கால வாழ்க்கைக்குச் சென்றான் ராஜேஷ். 
 
“உன்ன கல்யாணம் பன்ற வரைக்கும் நல்ல படிப்பு படிச்சிருந்தும் வேல செஞ்சி முன்னேறாம அப்பா அம்மா காசில ஊர் சுற்றும் வாலிபன் என்று சொல்லிகிட்டு எதுக்குமே ஆகாதவனா இருந்தன். அப்படி இருந்தும் நல்ல படிச்சிக்கிட்டு இருந்த உன்ன பாதியிலேயே படிப்ப நிருத்தி படிச்ச மாப்பிள்ளை பார்க்க வசதி இல்லாத உங்க அப்பா அம்மா அவங்க கடமை நிறைவேறனும் என்டதுக்காக என்ன உன் தல மேல கட்டி வெச்சிட்டாங்க.
 
உன் அன்பு, அறிவுரை, தைரியம், பக்க பலம் எல்லாம் தான் ஏதோ எங்கிட்ட பொழுதுபோக்குக்காக இருந்திட்டு இருந்த ட்ரெஸ் டிஸைனிங் ஸ்கில்ஸ வெளியில கொண்டு வந்திச்சி. நீ மட்டும் என் வாழ்க்கைல வராம இருந்தா இந்த ராஜேஷ் எதுக்குமே லாயக் இல்லாதவனா இருந்திருப்பன்” என ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டு கூறினான் ராஜேஷ்.
 
[வாசகர்களே! இது தான் ராஜேஷ் யாரு? அவன் என்ன படிச்சிருக்கான்? பவித்ரா யாரு இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி திருமணம் இடம்பெற்றது? என்ற விஷயங்களை சொல்றதுக்கு சரியான நேரம். அடுத்த பகுதியில் இதனைப் பார்ப்போம்.]
 
தொடரும்…
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments