இன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்

0
1005

கடந்த 16 ஆண்டுகளாக, இன்டெல் ஆண்டுதோறும் ஓபன் சொர்ஸ் டெக்னாலஜி மாநாட்டை நடத்தி வருகிறது அதில் அதன் புதிய
திட்டங்களை வெளியிடும்.தற்போது நடந்த மாநாட்டில் பல்வேறு புதிய முயற்சிகளை இன்டெல் அறிவித்தது அதில் குறிப்பாக லினக்ஸ் ஓஎஸ்யை மேம்படுத்த புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது.

சமீபத்தில் மூன்று கிளவுட் கம்ப்யூட்டிங் துவக்கங்களில் சுமார் 3 கோடி டாலர் முதலீடு செய்த பிறகு, இன்டெல் அதன் க்ளியர் லினக்ஸ் ஓஎஸ் திட்டத்தில் கவனம் செலுத்துகிறது.மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டால்லர் மற்றும் புதிய டெவலப்பர் பதிப்புஐ வெளியிட்டது.

இந்த மேம்படுத்தப்பட்ட OS இல் Deep Learning Reference Stack மற்றும் Data Analytics Reference Stack ஆகியவற்றை இணைத்துள்ளது.இன்டெல் கிளவுட் சூழலில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது.

இன்டெல், க்ளியர் லினக்ஸ் ஓஎஸ்இல் AVX-512 ஒருங்கிணைப்பு மற்றும் deep learning stack உள்ளது.மேலும் Data Analytics Reference Stack  மூலம் நிறுவனங்கள் பெரிய அளவிலான தரவுகளை பகுப்பாய்வு செய்ய, வகைப்படுத்த, அங்கீகரிக்க மற்றும் செயல்படுத்த உதவியாக இருக்கும்.தற்போது க்ளியர் லினக்ஸ் GCC9 complier இல் இயங்கிக்கொண்டிருக்கிறது மற்றும் விரைவில் GCC10 க்கு மாற்றப்படும் என கூறியுள்ளது.

இன்டெல் க்ளியர் லினக்ஸ் இயங்குதளத்தில் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பான அம்சங்களை சேர்துள்ளது.

நிறுவனம் x86 தளங்களில் செயல்திறன் மற்றும் பாதுகாப்புக்கான வெளியீட்டை மேம்படுத்தியுள்ளது. இந்த மேம்பாடுகள் டெஸ்க்டாப் அனுபவத்தை டெவலப்பர்களுக்கு மிகவும் எளிமையாக தேர்வு செய்ய உதவும்.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments