இயந்திர கற்றல் அல்லது செயற்கை நினைவகத்திற்கு பைத்தான் சிறந்த கணினிமொழி..

0
1630

குறைந்தபட்சம் ஏதாவதொரு மிகமேம்பட்ட கணினிமொழி தெரிந்திருந்தால் மட்டுமே இயந்திரகற்றல் சுலபமாக இருக்கும் என கணினிவல்லுனர்களின் விவாதத்தின் இறுதிமுடிவாகும் .மேலும் தற்போதைய சூழலில் முனைவர் பட்ட ஆய்வாளர் கள்மட்டுமே சிக்கலான படிமுறைகளையும் இயந்திரகற்றல் வழிமுறைகளையும் பயன்படுத்தி பிரச்சினையை தீர்வு செய்திடமுடியும் என்றநிலைஉள்ளது அதனால் இயந்திர கற்றலிற்கான(Machine Learning)அல்லது செயற்கை நினைவகத்திற்கான(Artificial Inteligent) நிரலாளர் பணியே நமக்கு வேண்டாம் என வெறுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

 அஞ்சற்க. ஜாவா ,சி ,சி++ ஆகிய வற்றைவிட எளிய அதேசமயத்தில் மேல்நிலை மொழியான பைத்தான் எனும் கணினிமொழியானது அதனுடைய ஒருங்கிணைந்த கட்டுகளான Numpy ,Pandas, Matplotlib , Seaborn ,Scikit-learn ஆகிய நூலகங்களின் வாயிலாக நமக்கு இயந்திரகற்றலை எளிதாக்க காத்திருக்கின்றது அவைகளை பற்றிய ஒர பறவைபார்வை பின்வருமாறு

1.Numpy எண்ணியல் பைத்தான் Numerical Python)என்பதை சுருக்கமாகNumPy என அழைக்கப்படும் இது அறிவியல்கணக்கீடுகளுக்கும் தரவுகளின் ஆய்விற்கும் மிகச்சிறந்த தீர்வாக விளங்குகின்றது தரவு அறிவியலிற்கும் இயந்திரகற்றலிற்கும் மிகச்சிறந்தகருவியாக திகழ்கின்றது அதைவிட இதுPandas , scikit-learnTensorFlow ஆகிய மேம்பட்ட கருவிகளுக்கு அடிப்படையாக விளங்குகின்றது மேலும் அறிந்து கொள்ள numpy.org/ எனும் இணையபக்கத்திற்கு செல்க.

2.Pandasஎன்பது பொதுப்பயன்பாட்டு தரவுஆய்விற்குமிகப்பிரபலமான நூலகமாக விளங்குகின்றது

பல்வேறு தரவு வடிவங்களை படித்தல் எழுதுதல்,

2. துணை தரவுகளை தேர்வு செய்தல்,

3. நெடுவரிசைகளை யும் கிடைவரிசைகளையும் கணக்கிடுதல்

4. காணாமற்போன தரவுகளைக் கண்டறிந்து நிரப்புதல்

5. தரவரிசையில் உள்ள சுயாதீன குழுக்களுக்கு செயல்பாடுகளைசெயல்படுத்துதல்.

6. வெவ்வேறு வடிவமைப்புகளில் தரவுகளை மறுவடிவமைப்பு செய்தல்,

7. பல்வேறு தரவுகளை ஒன்றிணைத்தல்,

8. மேம்பட்ட நேர வரிசையை செயல்படுத்துதல்,

9. Matplotlib , Seaborn ஆகிவற்றின் மூலம் காட்சிப்படுத்தல்ஆகிய பல்வேறு வசதி வாய்ப்புகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது மேலும் பயன்படுத்திகொள்ள pandas.pydata.org/ எனும் இணையதளத்திற்குசெல்க

3.Matplotlib இது ஒரு இருபரிமான (2D) காட்சிக்கான பைத்தான் நூலகமாக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது நம்முடைய தரவுகளிலிருந்து வெளியிடப்படும்தரத்திலான வரைகலைக்காக கட்டளைகளையும் இடைமுகங்களையும் இதுகொண்டுள்ளது மேலும் விவரங்களுக்குrealpython.com/python-matplotlib-guide/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

4.Seaborn என்பதுமற்றொரு புள்ளியியலிற்கான மிகச்சிறந்த காட்சியாக விளங்குகின்றது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்குwww.datacamp.com/ community/ tutorials/seaborn-python-tutorial எனும் இணைய முகவரிக்கு செல்க

5.Scikit-learnஎன்பது மிகவும் சிறந்த இயந்திரகற்றலிற்கான பைத்தான் கட்டுகளாகும் பல்வேறு வகைப்படுத்துதல்regressionஆய்வு,திசையின் இயந்திரத்தினை ஆதரித்தல் சேர்ந்த கிளஸ்டரிங் நெறிமுறைகள் ஆகியவசதி வாய்ப்புகள்இதில் உள்ளன மேலும் அறிந்து கொள்ள scikit-learn.org/ எனும் இணையதளபக்கத்திற்குசெல்க

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments