நதியோரம் எனை
வருடிச் சென்ற
இளகிய குளிர்காற்று…
காற்றின் தாளத்தில்
அசைந்தாடி
என் கால்களை
முத்தமிட்ட
அந்த குறும்
அலைகள்…
அடங்கிச் செல்ல
தயாராகும்
மாலை சூரியன்…
அது தடையின்றி
வாரி வழங்கும்
தங்க வெயில்….
அத்தனையும்
மேற்பார்வை
செய்யும்
கார்மேகங்கள்…
அனைத்தும்
என் மனதில்
எதையோ
கள்ளத் தனமாய்
திருடிச்
செல்கின்றன…
ரத்த நாடிகளை
எதையோ புதிதாய்
சமைக்கின்றன…
சுவாசப்பாதையில்
நுழைந்து
சலவை செய்கின்றன…
இதயத்தில்
இறக்கைகளை
பொதித்து
பறக்க விடுகின்றன…
கண்களில்
கண்ணீர்ப் பைகளை
உறைய வைக்கின்றன…
மேனியில் பரவிய
முடிகளை ஆட
வைத்து
மெய் சிலிர்க்க வைக்கின்றன…
நெஞ்சத்து புதையலாய்
மூட்டையிலிருந்த
கவலைச் சுமையை
எங்கோ கொலை
செய்து விட்டன…
ஆமாம், ஏதோ புது சக்தி
அவைகளில்…
இறைவனின் நேரடி
செல்வங்களல்லவா…?