ஈரம் படித்த
வீதியோர
நடை பாதையில்
பாதம் பதித்த
ஒரு நடை பயணம்…
வான் அழகை
முகில் மறைத்து,
வெண் பனியை
பூமிக்கு பூஜித்து,
கால் எங்கும்
குளிர் புகை ஏற,
மின்னல்கள்
ஒளி சிமிட்ட,
இடியோசை
கைதட்ட,
மெல்ல மலை சாரல்
மேனி எங்கும்
பரவி வர,
அதை தாங்க
மனமில்லாமல்
மரத்தின் கீழ்
தஞ்சமடைந்து
இலைகளில்
மிச்ச சொச்ச
துளிகள்
இதழ் நனைக்க,
ஒடுங்கிப் போய்
ஒரு கோடாய்
நின்று மழையழகை
மெய் மறந்து
காமுறுதல் செய்து
ஈரக் காற்றை
சுவாசிக்க
யாசகம் செய்து,
மழை யாகம்
முடிந்த பின்னும்
மனமில்லாமல்
குழந்தை போல்
அடம்பிடித்த
மனதை
அடக்கி வீடு திரும்பிய
அந்த நடை பயணம்….