இளைஞர்களும் சமூக மாற்றமும்

0
5204

வந்த வழியே மீண்டும் செல்வதற்குப் பழக்கப்படா கண்ணுக்குப் புலப்படா காலம் எனும் மறவாமல் விறுவிறுப்புடன் கண் இமைக்கும் நேரத்தினுள் தன் நோக்கத்தினை அடையவேண்டும் என போட்டி போட்டுக்கொண்டு செல்ல காலத்தினையும் கவனமாய் பயன்படுத்தி கச்சிதமாய் கழித்து பல வித்தைகளை சித்தத்துடன் செய்துவருகின்றனர் இன்றைய இளைஞர்கள் கூட்டம்.

சமூக மாற்றம் என்பது ஒரு சமூகம் தனக்கே உரித்தான வளங்கள், தேவைகள் இதன் செயற்பாடுகள் புதிதாக உருவாக்கப்பட்ட சிந்தனைகள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் தாக்கத்தினால் உந்தப்பட்டு ஓர் நிலையிலிருந்து இன்னுமொரு நிலையினை அடைந்து கொள்வதாகும். மனிதனது சமூக வாழ்வானது சமூகப் பிராணியான மனிதன் நாகரீகமான வாழ்க்கைக்கு உட்பட்டதன் பின்னர் தோற்றம் பெற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. இங்கு சமூகம் என்பது அவனது அடையாளத்தினை வெளிப்படுத்துவதற்காக அவனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகக்காணப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு தனிமனிதர்களது செயற்பாடுகளுமே ஒரு சமூகத்தின் செயற்பாட்டினை வடிவமைக்கிறது.

இங்கு நாம் மனிதர்கள் என்று குறிப்பிடுவதை விட இளைஞர்கள் என்று குறிப்பிடுவது மிகவும் ஏற்புடையதாக அமையும். ஏனெனின் ஒரு சமூகத்தின் நிலை வடிவமைக்கப்படுவது அச்சமூகத்தில் வாழும் இளைஞர்களின் செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. இதனாலே தான் காலம் மாறினாலும் ஒரு சமூகத்தின் விடியலுக்காய் ஒரு சமூகம் விடியலை நோக்கிய பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே தான் சமூக மாற்றத்தின் பிரதான ஊடகமாக இளைஞர்கள் காணப்படுகின்றனர். எல்லா சமூகங்களும் காலத்தின் மாற்றங்களோடு இந்த இளைஞர் கூட்டத்தின் செயற்பாடுகளினாலும் ஆரம்ப காலம் தொட்டு தற்காலம் வரை மாற்றமடைந்து கொண்டு வருகின்றது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. எனினும் ஏற்படுத்தப்படுகின்ற சமூக மாற்றமானது எத்தன்மை வாய்ந்தது என்பதை நாம் இங்கு நோக்க வேண்டும்.

மனித வாழ்வில் மாற்றம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. எனினும் இம்மாற்றமானது வினைதிறனான சமூகம் ஒன்றினை உருவாக்குவதற்காகக் காணப்பட வேண்டும். இல்லையேல் அம்மாற்றம் அச்சமூகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும். மறுபுறம் ஒரு சமூகத்தின் மாற்றம் அச்சமூகத்தின் விடியலை ஏற்படுத்தும் வகையில் வினைத்திறனாய் அமையுமாயின் அச்சமூகமே அச்சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உலகத்தில் கண்ட சுவர்க்கமாய் அமையும்.

இன்று நாம் காணும் சமூக மாற்றமானது அறிவியல், தொழிநுட்பம், தொடர்பாடல் போன்றவற்றில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ள அதேவேளை பண்பாடு, ஒழுக்கம், நாகரீகம் போன்றவற்றில் மிகவும் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பவையாகவும் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்துபவையாகவும் காணப்படுகின்றது. இது ஓரு சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனதும் செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு அமையப்பெறுகின்றது. இதனையே சுவாமி விவேகானந்தர்,

‘ நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொhறுப்பாளிகள் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது ‘
என்று கூறுகின்றார்.

ஆக ஒரு சமூகத்தின் சிறந்;த மாற்றத்திற்கு அங்கு வாழும் இளைஞர்களும் முக்கிய பங்காளிகளாகக் காணப்படுகின்றனர். மேலும் இத்தகைய மாற்றத்தினை ஒரு சமூகத்திற்குப் பெற்றுத்தருவதற்கு ஒவ்வொரு இளைஞனும் செயற்படுவது அவசியமாகும். இதன் போது பல தோல்விகளையும், கஷ்டங்களையும், தடைகளையும், ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும். இதுவே உலக நியதியாகவும் காணப்படுகின்றது. ஏனெனில் ஒருவரின் கஷ்டத்தின் பின்னே ஒரு சமூகத்தின் வாழ்வு அஸ்தமனத்தின் பின்பே விடியல் வரும் என்ற நியதிக்கமைய கிடைக்கப்பெறுகின்றது. இதனைத் தான் கண்ணதாசன்,

‘ மனிதன் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஓன்று பெற்றுச் சாவது மற்றொன்று செத்துப் பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள், கோடிக்கணக்கானவர்கள் செத்துப் பெற்றவர்கள். ‘
ஏன்று கூறுகின்றார்.

இங்கு மனிதன் பெறும் புகழ் என்பது ஒரு இளைஞன் தன்னை சமூகத்தின் சிறந்த மாற்றத்திற்காக முழுமையாக அர்ப்பணம் செய்து அதன் மூலம் குறித்த சமூகத்தினை வளர்ச்சியடையச் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் இழியாப் புகழாகும். இது எளிதில் அடையப்பட முடியாத ஒன்றே. இதன் போது ஏற்படக் கூடிய தோல்விகள், கஷ்டங்கள், தடைகள், ஏமாற்றங்கள் என்பனவற்றினைத் தாண்டி அம் முயற்சியினை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களும் ஆலோசணைகளையும் ஆதரவுகளையும் அனைவரும் வழங்க வேண்டும். மனித இனத்திற்காக இளைஞர்கள் படைக்கப்பட்டது பற்றி புனித பைபிலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

மேலும் இத்தகைய சிறந்த சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக வேண்டி இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களே இன்றய இளைஞர்கள் காணப்படுகின்றனர். அதனாலே தான் இப்பருவத்தில் மனிதனுக்கு ஒரு சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான உடல், உள வலிமையினை இறைவன் வழங்குகின்றான். இது பற்றி அல்லாஹ் தனது திருமறையில்

‘ அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான். பலஹீனத்திற்கு பின்னர் அவனே பலத்தினை உண்டாக்குகின்றான். (அந்தப்) பலத்திற்குப் பின் பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவனே படைக்கின்றான்; அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றல் உடையவன்’
(அல் குர்ஆன்)

ஆகவே இவ்வாறு இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான சரியான ஊடகமாக தொழிற்படுவதோடு அதன் மூலம் ஏற்படுகின்ற சமூக மாற்றமானது ஒரு சிறப்பான சமூகத்தினை உருவாக்கும் பாதையாகவும் நிலைபேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துவதாய் அமைய வேண்டும். இதுவே இளைஞர்கள் ஏற்படுத்தும் சமூக மாற்றமாகும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments