இழந்துவிடாதீர்கள்…!
தன்மேல் தன்-நம்பிக்கை
இழந்து போகும் போதுதான்
தற்கொலைகள் உருவாகின்றன….
(தற்)கொலைகள் பல வடிவம்!!!
காதல் வயப்பட்ட
அவனோ அல்லது அவளோ
கண்மூடித்தனமான காதலினால்
எதை இழப்பதற்கும் துணிந்துவிடுவது
அதிலொரு வடிவம்…
உயிரை மாய்ப்பதென்பது
காதலர்
காதல் தேவதையிடம்
பெற்றெடுத்த சாபம்!!!
ஒருத்தன் ஒருத்திக்கோ அல்லது
ஒருத்தி ஒருத்தனுக்கோ
உயிரை விடுவது
பெரும் பாவம்!!!
உண்மையான காதலெனில்
ஏன் அவர்கள்
விட்டு விலகிச்செல்ல வேண்டும்???
உங்களது அன்பு
அவர்களின் முன்னிலையில்
வெறும்வெற்றுக்காகிதமே…
அவர்களுக்குத் தேவை
ஏற்படும் போதுதான்
வர்ணம் தீட்டிவானவில்லாக்குவார்கள்
இல்லையெனில்
கசக்கி சுருட்டி காலடியில்போட்டு
மிதித்துவிடுவார்கள்
இதை உணராதவர்கள்
மீண்டும் மீண்டும்
அந்த அன்பை
தேடிச்செல்லும் பொழுது
உதாசீனப்படுத்தப்படுவார்கள்!!!
அந்த உதாசீனப்படுத்தல்தான்
அவர்களை
மேலும்உருக்கிவிடுகின்றது
ஆதலால் என்னவோ
அவர்களுக்கு அவர்களது உயிர்
பெரிதாய் தெரிவதில்லை…
அந்த வலியிலிருந்து நீங்க
அவர்கள்
உயிரை விடுவதற்கும் தயங்குவதில்லை…
ஒருகனம் நின்று நிதானித்து சிந்தித்து
பார்பார்களாயின்
அவர்களது காதல்
அந்த உயிரினை விட
மேலோங்கிக் காணப்படாது…
உங்களை மாய்த்துவிட்டு
உறவுகளைப் பொய்ப்பித்து விடாதீர்கள்!
நீங்கள் அறியாமலே
உங்களைக் காதலிப்போர் அதிகம்
உங்களதுதாய்இ தந்தையை போல!!!