உடை அலங்காரம்

0
2997

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங் கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியா மலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயே யும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள்.

பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களுக்கு அழகையும், தன்னம்பிக்கையையும் தரவேண்டும். ஆனால் பெண்களில் ஒருபகுதியினர் தங்கள் உடைகளில் திருப்தியடைவதில்லை. அதற்கு காரணம் அவர்களது உடல் அமைப்பு. ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருக்கும் பெண்கள் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற உடை எது? என்று தெரியாமல் தவித்துப்போகிறார்கள். நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அதிக நிறத்துடன் காட்சியளிப்பவர்களும், சுமாரான நிறத்தில் தோன்றுகிறவர்களும், தங்களுக்கு எந்த நிறத்திலான உடை பொருத்தமாக இருக்கும்? என்று குழம்புகிறார்கள். அவர்கள் குழப்பம் நீங்கி, அழகான உடைகளை தேர்ந்தெடுக்க தேவையான ஆலோசனைகள்! 

  • உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால்  பார்க்க அழகாக இருக்கும்.
  • சில பெண்களின் ஒட்டுமொத்த உடல்வாகு ஒல்லியாகத் தோன்றும். ஆனால் கால்கள் மற்றும் சற்று தடித்த நிலையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் லெகின்ஸ் அணிய விரும்பலாம். அவர்கள் அடர்ந்த நிறத்திலான லெகின்ஸை தேர்ந்தெடுக்கவேண்டும். சற்று குண்டான கால்களை இது ஓரளவு ஒல்லியாக காட்டும். இவர்கள் பொதுவாகவே உடலை இறுக்கிப்பிடிக்கும் உடைகளை தவிர்ப்பது நல்லது. சற்று கெட்டியான மெட்டீரியலில் தயார் செய்யப்பட்ட லெகின்ஸ்களை அவர்கள் தேர்ந்தெடுத்து அணியவேண்டும். காபி பிரவுன், அடர் பச்சை, கறுப்பு, நேவி ப்ளூ, பர்பிள்.. போன்ற நிறங்கள் அவர்களுக்கு பொருத்தமானது. இளம் நிறத்திலான குர்தியை இதற்கு மேலாடையாக அணியலாம்.
  • குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவாக உள்ள பார்டர்கள் போட்ட உடைகள் அணிவது அழகாகவும், ஒல்லியாகவும் தெரியும்.
  • குள்ளமான, தடிமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு சாப்ட் சில்க், மட்கா, மால்குடி மெட்டீரியல்கள் ஏற்றது. அவர்கள் சரும நிறத்துக்கு ஏற்ற அடர்நிறங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். இதனை நன்றாக பிளட் செய்து உடுத்தினால், உடலுக்கு பொருத்தமாகவும், சற்று உயரம் கூடுதலாகவும் தெரியும்.
  • பெரிய பதவிகளில் இருப்பவர்களின் உடை அலங்காரம், மேக்-அப் போன்ற அனைத்துமே யதார்த்தமாக, மிதமானதாக அமைந்திருக்கவேண்டும். ஆபரணம் அணிவதிலும் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். சற்று கனமான ஒரே ஒரு ஆபரணம் அணிந்தால் போதுமானது. உடைகளை பொருத்தவரையில் புடவையும், குர்த்தியும் ‘செமி பார்மல் லுக்’ கொடுக்கும். லினன் பேண்ட், டாப்பும் ‘செமி பார்மல் லுக்’ தரும். எந்த உடையாக இருந்தாலும் பெரிய ‘காலர்’, ‘த்ரீ போர்த்’ அல்லது ‘புல் லென்த் ஸ்லீவ்’ பொருந்தும். மெஜந்தா, லெமன், மஞ்சள் போன்ற பளிச் நிறங்களை தவிர்க்கவேண்டும்.
  • சிவப்பு நிறம் கொண்டவர்களுக்கு அனேகமாக எல்லா நிறங்களும் பொருத்தமாக இருக்கும். பளிச் நிறங்கள் அவர்கள் அழகை தூக்கலாக்கும். மெட்டாலிக்ஸ், ஷிம்மர் ஷேட்ஸ் போன்றவைகளும் சிவப்பு நிற சருமத்திற்கு ஏற்றது.
  • சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு டார்க் கலரும், கருப்பாக இருக்கும் பெண்களுக்கு லைட் கலரும் பொருத்தமாக இருக்கும் என்ற  பொதுவான கருத்து உள்ளது ஆனால் அது மிகவும் தவறு. கருப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடை அணிந்தால், அவர்கள் மேலும் கருப்பாகத் தெரிவார்கள்.
  • ஆனால் சிவப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் அணிந்தால் மேலும் அழகாகத் தெரிவார்கள். கருப்பான பெண்களுக்கு ஓவர் லைட்டாகவும் இல்லாமல், ஓவர் டார்க்காவும் இல்லாமல் இருக்கும் மீடியமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது. உதாரணமாக கருப்பான பெண்கள் புளூ கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும்,கலராகவும் தெரிவார்கள்.

  • உயரமாக, தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பவர் களுக்கு ‘லாங்க் ஸ்கர்ட்ஸ்’ பொருத்தமாக இருக்கும். கால் பாதம் வரை மறைக்கும் ‘போஹோ ஸ்கர்ட்’ அதிக அழகுதரும். சிங்கிள் கலர் ஸ்கர்ட் வித் பிராட் பார்டர் வகை இப்போது இளம் பெண்களால் அதிகம் விரும்பி அணியப்படுகிறது. கலம்காரி, ஜெய்ப்பூர் பிரிண்ட் மெட்டீரியல்கள் இந்த வகை பார்டருக்கு ஏற்றது. 
  • ஜாமெட்ரிக் அல்லது புளோரல் பிரிண்ட் கொண்ட ஸ்கர்ட்டுகள் பெரும்பாலான பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும். அடுக்கடுக்காக தோன்றும் ‘டயர்ஸ் ஸ்கர்ட்டும்’ நன்றாக இருக்கும். இத்தகைய ஸ்கர்ட்டுகள் அணியும்போது சிங்கிள் கலர் டாப் அணிவது பொருத்தமானது. ஸ்லீவ் லெஸ் டாப்பும் அழகுதரும். இந்த ஸ்கர்ட், டாப் அணியும்போது சில்வர் அல்லது பழங்குடியின மக்கள் அணிவது போன்ற ஆபரணம் அணிவது மெருகேற்றும்.
  • எந்த ஒரு ஆடை அணிந்த உடன் அது நமக்கு ஏற்றதாக இருக்கிற தா? இது பிட் ஆகிறதா? என்று கண்ணாடியின் முன் நின்று உங்களுக்கு நீங்களே சுய விமரிசனம் செய்துகொள்ளுங்கள். சரியான உள்ளாடைகள் அணிவது தன்னம்பிக் கையை அதிகரிக்கும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments