உனக்கான காலம்

0
524
IMG-20200426-WA0002

 

 

 

 

சமையலறையிலே 
ஒரு தங்க வாத்தை 
தரம் பிரித்து பூட்டியது 
ஆண்மை வேட்கை

சமத்துவம் 
அரசியல் பித்தலாட்டத்திற்கு மட்டும்தான் 
என்ற போக்குடையோர் 
வீட்டில்தான் கிடக்கிறார்கள் 
வேலையின்றி… 

நாள் முழுதும் 
அவள் வேலை செய்வதை பார்த்துணர்ந்து 
குடிகாரன் வீட்டு மனையாளுக்கு  
கொக்கரிப்பு கொஞ்சம் 
கூடிவிட்டது

குடிகாரன் நாள் முழுக்க  
வீட்டிலே சாகடிப்பானே 
முற்றமதில் முணுமுணுப்பு  
குடிகாரன் கூட  
துணையில்லாத கோழிகள் 
துணிவாகத்தான் நடக்கிறது 
பூமியில் தலை நிமிர்ந்து 
இல்லமும் நடத்துகிறது
சொந்தக்காலில் நின்று 

அவளை 
விதவையென்று விலக்கப்படல் கூடாது 
தனித்துவமாய் எழுப்பப்படல் வேண்டும் 
புணர்தலுக்கு  
ஓடிவரும் ஆணினம் 
அவளை உணர்தலுக்கு 
தயங்கியது நேற்று 

தயங்கிய கைகளும் 
தும்புத் தடியெடுத்து துடைக்கிறது வீட்டை
அப்படியோ உடைக்கட்டும் 
மாசுபடிந்த மூளை பூட்டை 

அவள் அருமை 
உணர்த்த தானோ 
covid-19 க்கு மருந்தில்லா 
வறுமை தொடர்கிறது 

பலர் வீடடங்கிப் போயிருப்பர் 
அன்னையென்ற அவள்
இல்லையென்றால்…

பெண்மை
உலகை பிரசவிக்கிறது.
புரியாத ஆண்மை
அவளை சீரழிக்கிறது.

சமைக்கும் அடிமையில்லை
இப் பெண்ணினம்
சாதிக்கும் படிமையென்ற
மனிதரினம்
பாலின சாக்கடைக்குள்ளிருந்து
மீட்டெடுக்க
மனிதம் கை கொடுக்க வேண்டும்

எக்கையின் உதவியின்றியும்
எழுந்துவரும்
துணிவும் வேண்டும்
இது உனக்கான காலம்…

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments