உன் எண்ணங்கள் மாசு படிந்தவை..
உன் முகம் வேஷம் தரித்தது…
உன் உதடு பொய்களை மாத்திரமே உச்சரிக்கப் பழகியது…
உன் மனம் அழுக்குகளை ஆதரிக்கிறது…
உன் புத்தி ஏமாற்று என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது
உன் செயல்கள் ஏமாற்றக் கற்றுக் கொண்டவை
உன் புத்தகங்கள் உன் அடிமைத்தனத்தை சுமந்தவை
உன் விருப்பும் தழுவுகை
ஆகவே.. இத்தனையும் தரித்த உன் விம்பம் மாத்திரம் எப்படி புனிதமாகிறது.. அடுத்தவன் பார்வையில்…
இதுவே… உன் சிறந்த நடித்தலுக்கான விருது..
இதுவே ..வாழா உன் வாழ்க்யைின் சாபக்கேடு…
இதையா இன்பம் என்று.. பினத்துகிறாய்…
உன்னை நீீ ஏமாற்றுகிறதே..உனக்கான இன்பமாய்..
உன் ஆழ்மனது குற்றங்களை சுமந்த ஒரு கழிவுத்தொட்டி …. அவை–
உன் இரவுகளையும் உன் நிசப்தங்களையும் பிராண்டிக் கொள்கிறதா…
அப்போ உன் திருந்ததலுக்கான ஒரு சாத்தியம் உன் ஜீன்களால் கடத்தப்படுகிறது..
அதையும் தவறவிட்டுக் கொண்டிருக்கும் உன்னிடம் எதை புரிய வைக்க முடியும்…
தனிமையும் உன் உள்ளுணர்வும் தரும் பாடம் போல் வேறு எவராலும் உனக்கு உன்னை உணர்த்த முடியுமா என்ன..
திருந்து… இல்லை பொய்களின் மறுபெயராகவே வாழ்ந்துவிட்டுப்போ..
உன்னிடமே.. உனக்கான உன் சுயத்தை இழந்து…பின் அவை தேடுதலுக்கான.. ஞாபகங்களையும் தொலைத்துவிடுவாய் அதுவாகவே ஆகிவிடுவாயே…
திருந்து… இல்லை.. உன்னை நிரூபித்தலின் பெயரில் தினம் தினம் உன்னை தொலைக்கவேண்டும்…
திருந்து…
எங்கு நீ தொலைக்கப்பட்டாயோ அங்கிருந்தே நீ தோன்றவேண்டும்..
முதலில் உன் புத்தகங்களை மாற்றிக் கொள்…