உன் கல்லறை வாசகங்கள்

0
2059

 

 

 

 

எதுவரை இப்பயணமோ எண்ணங்களின் எதிர்பார்ப்பு
விதி விலக்காய் உள்ளவர் யார் முடிவிலியைக் கண்டவர் யார்
வரும்போது வரவேற்க உன் விழி நீரே விருந்தளிக்கும்
போது தனை வழியனுப்ப பிற விழித் துளிகள் விடை தருமே

ஊழ்வினையின் விதிப்படியே வாழ்க்கை வட்டம் சுழல்வதென்ன
நேற்றிருந்தார் இன்றில்லை நிலையாமை காணாயோ
நிம்மதியாய் வாழ்ந்த நாட்களை நினைவுறுத்தி பாராயோ
தோள் கொடுத்த தோழமையை தொலை தூரம் உணர்ந்தாயோ

தாய் மடியில் தவழ்ந்திருந்த தருணங்கள் இனி வருமா?
பொறுப்புடனே கண்டிக்கும் தந்தை முகம் நினையாயோ
உன் உதிரத்தின் உடன்பிறப்பு உடமை எழுதி கேட்பதென்ன
நீ உள்ளவரை உவகையினை உதடுகளில் வைத்திருப்பர்

பாலர் பள்ளிக்கூடமதில் காலன் வேடம் தரித்திட்ட
கணப்பொழுதும் கண்முன்னே நிழலாடும் நேரமிதே
நீ வாழ்நொடிகளில் சேர்த்திட்ட நிலையான செல்வமெங்கே
உன் நல்வினையும் தீ வினையும் தொடர்ந்து வரும் அறிவாயே…

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments