இறைக்கும் வெயிலுக்கு
பறக்கும் காக்கை கூட
ஒழிந்திருந்தே இரை தேடும்..
தகிக்கும் வெயிலும்,
உள்ளத்துப் புழுக்கத்தில்
குளிர்காட்டு குதிரைவீரன் போல்
உணர்வுகள் விரைத்திருக்கும்
நெஞ்சினில் கனமேற..
பறக்கப் பறக்க பருக்கைகள்
தேடும் தாய்க்குருவிக்கு,
தார்ச்சாலை முத்தங்களும்
ஒத்தடங்களே…
வெடித்துக்கிடக்கும் பாதங்கள்
கானலில் தலை நனைத்து
நெடுந்தூரம் நடக்கின்றது…
உடல் முழுக்கப் புழுதியோடு
மனம் முழுதும் வெந்துருகும்
வேடந்தாங்கல் பறவைகளுக்கு
இரை தேட உதவிடுவோம்…
கால் வயித்துக் கஞ்சிக்கு
ஊர் முழுதும் சுற்றி வரும்
ஊர்க்குருவி உறவுகளுக்கு
நன்னீராய் ஆகிடுவோம்…!!
கொப்பளித்த பாதங்கள் தேடி
கோடை மழையினைப் போல்
கசியும் வார்த்தைகளால்
சிறுதூறல் இட்டு வைப்போம்…