என்னுடன் உரையாடிய என் பேனை
என்னோடு உறவாடியது என்-காதலியாக.
வானத்தின் சாயத்தினை களவெடுத்து
உன்-கற்பனையின் கவி வரியை களங்கமில்லாமல் எழுத
என்னையும் உருவாக்கினாய்
மை கொட்டும் பேனையாக.
முழு நிலவில் வெட்டியெடுத்த
வெண் நிற தாளில்
நான் சிந்திய இரத்தம்
உமக்கு சொற்களை சுவைக்க சுகம் தந்ததோ?
நீ சிந்தித்த எண்ணத்தை நானும் சிந்தினேன்
என்-மென் நிற மை கொண்டு.
நானும் புல்லாங்குழல் போன்ற ஊமை தான் .
ஆனால்-மௌனம் தான் என் மழலை மொழி
உனக்கான உயிர் அற்றவள் நான் தான்
பெண்மையில் பேனையாக எழுதி மடிகிறேன்.
ஒரு சில துளிகளினூடாக……🖋