உருளைத்தக்காளி- Pomato

1
658

 

 

 

ஒரேசெடியில் தக்காளியும், உருளைக்கிழங்கும் விளையும் நவீனமுறையை கண்டுபிடித்துள்ளது பிரிட்டனைச்சேர்ந்த தாம்சன் & மார்கன் என்ற விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் நிறுவனம்.

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளித்தாவரங்களை ஒன்றாக ஒட்டிடுவதன் மூலம் உருவாகும் தாவரம்  (Pomato) உருளைத்தக்காளி எனப்படும். இதில் தக்காளி தண்டுப்பகுதியிலும் உருளைக்கிழங்கு வேர்ப்பகுதியிலும் ஒரே தாவரத்தில் கிடைக்கும்

 15 வருடங்களாக இந்தச்செடியை உருவாக்க பல நாடுகளிலும் தாவரவியலாளர்கள்  ஆய்வு செய்தும் சோதனை முயற்சியே சாத்தியமானது

 செப்டம்பர் 2013ல்தான் தாம்சன் & மார்கன் நிறுவனம் பலஆண்டுகளின்  ஆய்வு முயற்சிகளுக்குப் பின்னால்  இந்த  ஒட்டுச்செடியை சோதனைமுறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக்கி, பொதுமக்களுக்கும்  விற்பனைசெய்தது.

மரபியல் மாற்றங்கள் செய்யாமல், இயற்கையானமுறையில் சொலனாசியே (Solanaceae) குடும்பத்தைச்சேர்ந்த இவ்விரண்டு செடியின் ஒரே அளவிலான தண்டுகளை  ஒட்டுவைத்து ( Grafting ), கட்டி, தக்காளிச்செடியின் வேர்களையும் உருளைக்கிழங்கின் தண்டுப்பகுதியையும் நீக்கிவிட்டு மண்ணில் நடும் மிக எளிய முறையில்   இந்த உருளைத்தக்காளிச்செடி உருவாக்கப்பட்டுள்ளது

12 வாரங்களில்  அறுவடைக்கு இரண்டு காய்களுடன் தயாராகும் இச்செடி டாம் டேட்டொ (Tom tato)    என்னும் பெயரில்  ஒன்று 14 டாலர் என்று விற்பனை செய்யபப்டுகின்றது. பிரிட்டனின் இந்தமுறையை நியூசிலாந்து   விவசாயிகளும் பின்பற்றி  பொட்டேட்டொ டாம் (Potato Tom)  என்னும் பெயரில்  இச்செடியை விற்பனை செய்யத்  தொடங்கியுள்ளனர்.

ஒருசெடியில் 50 வரை சுவையான தக்காளிகளும் அதிக உருளைக்கிழங்குகளும் கிடைப்பதாலும், மரபணு மாற்றமேதும் செய்யப்படாததாலும், இச்செடியை வீட்டிற்குள்ளும் வெளியிலும் எங்கும் வளர்க்கலாமென்பதாலும்,   மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச்சென்று வளர்க்கிறார்கள்.

குறைந்த நிலப்பகுதியில் அதிக காய்கறிகளை பயிரிட இம்முறை வழிவகுக்கும் என்பதால் இந்த ஆய்வு இன்னும் பல செடிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

கண்ணாடிக்குடில்களில் கட்டுப்படுத்தபட்ட வெப்பநிலையில் மிகத்துல்லியமான வளர்ப்புமுறைகளின் மூலம்  ஒவ்வொன்றாக தனிப்பட்ட கவனத்துடன் கைகளால் ஒட்டுவைக்கப்பட்டு உருவாக்கப்படும் இச்செடிகள் புதுமை மட்டுமல்லாது வளரும் நாடுகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய உதவியாகவும் இருக்கும்.

 

 

 

 

 

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Moni Aash
Moni Aash
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சிறந்த தகவல். ஆனால் இதுவரை எங்கள் சந்தைகளில் இன்னும் காணக்கிடைக்கவில்லை. கிடைத்தால் வாங்கலாம்