தேன் வைத்தியம் – உறக்கத்தை தரும் தேன்

0
1105

உறக்கம் வராமல் வருந்துவோரின் தொகைதான் எத்தனை? வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் உறக்கம் என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறார். படுக்கையில் படுக்கின்றார் கண்கள் மூடுகின்றன. காலையிலிருந்து அவர் பார்த்த காட்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் ஆடிவிட்டு போகின்றன. திடுக்கிட்டு எழுகிறார். குயில் கூவிக் கொண்டிருக்கிறது பொழுது புலர்ந்து விட்டது பின்பு இதோ அவரே கூறுகிறார் உருக்கமாக.

“உறக்கமே! இப்படியே நேற்று இரவும் வருந்திப் புரண்டேன். முன்னிரண்டு இரவுகளும் கலங்கி தவித்தேன். இன்றாவது எப்படியாவது என்னை நோக்கி வந்து தழுவி அனைத்து தாலாட்ட மாட்டாயா? பகலுக்கு பகல்இடையே நின்று வாழ்விக்கும் புண்ணியமே வருக! வளமும் வனப்பும் பொருந்திய வாழ்வு நலத்தையும் தரும். அருள் கனிந்த அன்பு தாயே, வருக! இன்றாவது என்னை ஆட்கொள்.

 

 

 

இப்படி இந்த கவிஞர் ஒருவர் மட்டும்தானா? பலர் எண்ணிறந்த மக்கள் அவர்களுக்கும் உறக்கத்தை வரவழைக்கும் உறக்கம் வரவில்லை என்றாலும் சரி, நடு உறக்கத்தில் பிடித்து தூங்க முடியவில்லை என்றாலும் சரி, தேனை உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். உறங்கப் போகும் போது ஒரு டம்ளர் வெந்நீரில் அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து ஓர் 2 தேக்கரண்டி தேனையும் விட்டு நன்றாகக் கலக்கிக் குடித்து விடுங்கள். பின்பு தலையணையில் சாய்ந்தவுடன் இமைகளை உறக்கம் வருடும். கொஞ்சம் கொஞ்சமாய் இரவு உணவின்போது தேனை அருந்தும் பழக்கத்தை கை கொண்டு வரவேண்டும். ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தும் தூக்கம் வராத சிலர் இருப்பார்கள் மீண்டும் அவர்கள் ஒரு டம்ளர் தேனும் நீரும் எலுமிச்சை சாறும் கலந்த வெந்நீரை அருந்தட்டும். காசை கொட்டி நோயை தேடி உயிரையும் அரிக்கின்ற ‘அந்த அற்புத தாலாட்டு தூக்க மாத்திரைகள் தராத ஆழ்ந்த உறக்கத்தை தேன் தருவதை காண்பார்கள்.

Source : டாக்டர். இரத்தின சண்முகனார் (பதிவு பெற்ற சித்த மருத்துவர்) அவர்களின் தேன் வைத்தியம் என்ற நூலிலிருந்து

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments