உலகின் காரமான மிளகாய்கள்

0
1667

 


 

காரசாரமான பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய சமையலே இல்லை எனலாம். இந்திய சமையலின் பிரத்யேக தன்மையே அதன் மசாலா சேர்த்தலில்தான் இருக்கிறது. குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் என பலவிதஙகளில் நாம் மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்கிறோம் ரத்த சர்க்கரை அளைவை கட்டுக்குள் வைக்க, உடல் எடையை குறைக்க, செரிமானத்தை தூண்ட, சருமம் மென்மையாக, பிராஸ்ட்ரேட் புற்று நோயை தடுக்க என உடல்நலனை பதுகாப்பதில் மிளகாய்கள் பெரிதும் பயன்படுகின்றன.

மிளகாயில் உள்ள காப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருளே அதன் காரச்சுவைக்கு காரணமாகும். ஸ்கோவில் அளவு என்பது (Scoville scale) என்பது மிளகாய், மிளகு போன்ற மசாலாஉணவுப்பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும். இது ஸ்கோவில் வெப்ப அளவீடு (Scoville heat units-SHU) என்று குறிப்பிடப்படுகிறது. காரமான பொருட்களின் சூட்டினை அளவிடும் இந்த அலகு. 1912ல் அமெரிக்காவை சேர்ந்த வில்பர் ஸ்கோவில் என்பவரால் கண்டுபிடிக்கபட்டதால் காரத்தை அளவிடும் முறை அவர் பெயராலேயே ஸ்கோவில் அளவு என்று அழைக்கபடுகிறது.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் குடை மிளகாயில் உள்ள காரத்தின் அளவு 0 (பூஜ்யம்) யூனிட்.பச்சை மிளகாயில் 2500 முதல் 5000 வரை, காய்ந்தமிளகாயில் 3500 முதல் 10000 யூனிட். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மிளகாயில் 30,000 முதல் 50,000 யூனிட்.
சாதாரண கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 5000 முதல் 100,000 ஸ்கோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை சாதா கார வகையை சார்ந்தவை.
அதீத கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 80,000 முதல் 300,000 ஸ்கோவில் அளவு வரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட் ஆகியவை அதீத கார வகையை சார்ந்தவை.

காரம் கூடிய மிளகாய்களை உற்பத்தி செய்வதென்பது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு பந்தயமாகவே 1990களிலிருந்து நடைபெற்று வருகிறது, வருடா வருடம் 1000,000 ஸ்கோவில் அளவுக்கு மேலிருப்பவை எல்லாம் சூப்பர் ஹாட் பட்டியலில் சேர்ந்துவிடும்.


முன்பு உலகின் காரம் கூடிய மிளகாயாக இருந்தது வடகிழக்கு இந்தியாவில் விளைவிக்கப்பட்ட Bhut Jolokia என்ற இந்திய மிளகாய் (1,041,427 SHU). இதனைப் பேய் மிளகாய் (Ghost Chilli) எனவும் அழைப்பர். பொடியாக்கப்பட்ட இந்த மிளகாயை கையெறி குண்டுகளில் (hand grenades) இந்திய ராணுவம் பயன்படுத்துகின்றது. அதன் பின்னர் Bhut Jolokia வை மிஞ்சியது Infinity எனப்பெயரிடப்பட்ட Capsicum chinense எனும் புதிய வகை மிளகாய். இம் மிளகாய் Scoville அளவின்படி 1,067,286 – 1,176,182 ஆகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சாஸ் தயாரிப்பாளரான (Nick Woods) நிக் வுட்ஸ், என்பவரால் 5 வருட கலப்பின் முயற்சிக்களுக்கு பின்னர் அவரது பசுமைக்குடிலில் உருவாக்கபட்டு, 2011 பிப்ரவரியில் இரண்டு வாரங்களுக்கு உலகின் காரம் கூடிய மிளகாயாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. அதன் பின்னர் அதே ஆண்டில் Trinidad scorpion ‘Butch T’ pepper என்னும் மிளகாய் 1,463,700 ஸ்கோவில் அளவுடன் உலகின் காரமான மிளகாயாக மூன்று வருடங்கள் கின்னஸ் புத்தகத்தில் பெயர்பெற்றிருந்தது.

 

 

பின்னர் 2013லிருந்து HP22B என்றும் அழைக்கப்படும் கரோலினா ரீப்பர் Carolina reaper எனப்படும் மிளகாய் 3,200,000 ஸ்கோவில் அளவுடன் கின்னஸ் புத்தகத்தில் முந்தைய மிளகாய்களின் காரத்தன்மையை முறியடித்து இன்றுவரை உலகின் அதிக காரமான மிளகாயாக இருக்கின்றது.
சிறியதாக சுருக்கங்களுடன், நுனி கூர்மையாக உருண்டையான வடிவில் இருக்கும் இந்த மிளகாய்களை உட்கொள்வது என்பது சாதனைக்குரியதொன்றாகவே பார்க்கப்படுகிறது. Youtube தளத்தில் இது தொடர்பான விஷப்பரீட்சைகளைக் காணலாம்.
100 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் அதிகபட்சம் சுமார் 4.72 கிராம் அளவுள்ள காரத்தை தாங்கும் திறன் பெற்றிருப்பார். ஆனால், இந்த மிளகாய்கள் சுமார் 3.18 மில்லியன் அளவிற்கு காரச்சுவையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.

இம்மிளகாய்களின் விதைகள் எல்லாமே சந்தைப்படுத்தபட்டுவிட்டது. இந்த அதீத கார மிளகாய்களை சமைக்கையில் வெறும் கையால் கூட தொடமாட்டார்கள். கையுறை, முகமூடி என அணிந்துதான் இதனை கையாளுவார்கள்.

 


 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments