உலகின் மிகபழமையான புத்தகங்களில் ஓன்று எட்ருஸ்கன் தங்க புத்தகம் (The Etruscan Gold Book). 70 ஆண்டுகளுக்கு முன்பு பல்கேரியாவில் ஸ்ட்ரூமா ஆற்றிலிருந்து ஒருகால்வாயை தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டது.
எற்றூரியாவில் (இன்றைய டஸ்கனி, மேற்கு அம்பிரியா, மற்றும் இலத்தீன்) வாழ்ந்த மக்களும் அவர்கள் பேசியமொழியும் எட்ரூசஸ்கான் ஆகும். எட்ரூஸ்கான் கண்டுபிடிப்புகளிலேயே, மிக அறிய மற்றும் முக்கியமான ஓர் கலைப்பொருள் எட்ரூஸ்கான் தங்க புத்தகமாகும்.இந்நூல் 100 கிராம் எடையுடைய 23.82 காரட் தங்கத்தால் உருவான ஆறு தங்கத்தட்டுக்களால் ஆனது. இந்த தட்டுகள் இரு மோதிரங்களால் பிணைக்கப்பட்டுள்ளது. இது உலகில் மிகப் பழமையான ஒரு கலைப்பொருளான இதை கோல்டன் ஆர்பிஸம் புத்தகம் என்றும் அழைப்பர்.
இந்நூலை பல்கேரியாவை சேர்ந்த விளாடிமிர் ஜார்ஜிவ் என்பவர் ஆராய்ச்சி செய்தார். எனினும் இந்நூல் இன்னும் முழுமையாக குறியாக்கம் செய்யமுடியாமல் போனது. 2673 வருடங்கள் பழமையான இந்த தொல்பொருள் பல்கேரியாவிலுள்ள சோபியாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
Super
Nice
useful