உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங்.

0
1386

2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்தது அதை தொடர்ந்து  மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வந்தது மேலும் இத்துடன் பட்ஜெட் ரக பிரிவில் அதிக தொழில்நுட்பத்தை சற்றே குறைந்த விலையில் வழங்க சாம்சங் முடிவு செய்தது. ஹூவாய், ஒன்பிளஸ் மற்றும் இதர சீன நிறுவனங்களின் வரவு காரணமாக சந்தையில் சாம்சங் நிறுவனம் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு,சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் , இதன் வெளியீட்டு விவரத்தை சாம்சங் நிறுவன மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி கோ டாங் ஜின் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்கு சாம்சங் கேலக்ஸி போல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மையப்பகுதியில் மடிக்கக்கூடிய வகையில் உள்ளது.இதன் விலை1980 டாலர்கள் (இலங்கை மதிப்பில் ரூ.3,49,153) ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம்.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமராக்கள், இரண்டு செல்ஃபி கேமராக்கள் மற்றும் முன்புற கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:

– 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே

– 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 640 GPU

– 12 ஜி.பி. ரேம்

– 512 ஜி.பி. மெமரி

– 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா

– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், AF, OIS,

– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ்,

– 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா

– 10 எம்.பி. கவர் கேமரா

– AKG டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்

– 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)

– 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

   – வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலை பகிர்வு
நன்றி : டெக் தமிழ்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments