தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 2 கப்
பொடித்த சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
மில்க்மெய்ட் – 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
சமையல் எண்ணெய் – ஒரு சொட்டு
உப்பு – ஒரு சிட்டிகை
வறுத்து சேர்க்க : நெய் – 2 டீஸ்பூன்
நறுக்கிய முந்திரி, நறுக்கிய பாதாம், உலர்திராட்சை, வெள்ளரி விதை – தலா 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
- நான்கு கப் நீரைக் கொதிக்கவிட்டு, உப்பு, எண்ணெய் சேர்க்கவும். இதில் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைத்துக் கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டுப் பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
-
பின்னர் நன்கு உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி டிரை ஃப்ரூட் வகைகளை வறுத்து, உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து, மேலும் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பரிமாறும் முன் மில்க்மெய்ட் சிறிதளவு விட்டுப் பரிமாறவும்.
நன்மைகள்:
- ஹீமோகுளோபின் நிலைகளை மேம்படுத்த உலர் பழங்கள் உதவுகிறது. செறிவூட்டப்படாத கொழுப்புக்கள், வைட்டமின் பி, பாஸ்பரஸ், செம்பு, இரும்பு போன்றவை கிடைக்கிறது. நம் உடலின் முக்கியமான உறுப்புகள் சரியாக செயல்பட உகந்தது.
- இரத்த சோகையைத் தடுக்க, கொழுப்பின் அளவு பராமரிக்க உதவும்.