உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!

0
692
79ea4b3e47911aac8c267ee7e4871c40-dca2ead0

 

 

 

 

 

 

வசிய இருட்பாவில்
பிரிய வார்த்தைகளை
வளரவிட்டு
நேசம் என்றும்
பாசமென்றும்
சீவிச் சிங்காரித்த
செல்லங் கொஞ்சல்களும்

பொழுது போக்கிற்கும்
உங்கள்
பொல்லாத ஆசைகளும்
நட்பு என்றும்
காதல் என்றும்
ஏகாந்த பொழுதுகளில்
தாகம் தீர்க்கும்
தட்டச்சு மோகங்களும்

கூச்சம்மின்றி நீங்கள்
கைகுலுக்கும் ஆசை கண்டு
முட்டுவதா ?
குத்துவதா எனத்தெரியாமல்
நான்..!!!

என்
கதவடைப்பு
காரியங்கள் கண்டு
நெருப்பு சாட்டைகள் கொண்டு
விளாசிப்போகும் உங்கள்
விசனங்கள் வலி மிகுந்தது
தோழமையே!!

மாற்றம் ஏதும் செய்ய முடியா
இவ்வுலகத்து நீதிக்கெதிராய்
முடிவிலா யுத்தமொன்றின்
போர்முரசாய் என் வரிகள்

அதைவிடுத்து,
நீங்கள்
எண்ணி மகிழும் அளவிற்கு
அன்பானவளுமில்லை,
மருகித்தவிக்க
இனியவளுமில்லை..
இன்னும்,
ஏங்கித்தவிக்க
எழிலழகியுமில்லை…
.
உள்பொட்டிக்குள்
மூக்கினை நுழைத்து
பின் பற்களை அழுத்தி
என் கனவினை உறிஞ்சத் துவங்கும்
எண்ணங்கள் இருந்தால் இப்போதே மறந்திடுங்கள்

ஆயுத பூஜைகளை
அலாதியாய் படைக்கும்
ஆற்றல் எனக்குள்ளும் மறைந்தே கிடக்கின்றது

மாதுளை என நினைத்து
நெருப்பு மலர் தீண்டி
கருகிச் சாகும் எண்ணங்கள்
வேண்டாமே சிநேகிதா….!!!

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments