ஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள்

0
778

முதல் நாளே நீங்கள் வாங்க வேண்டிய அனைத்து பொருட்களுக்குமான ஒரு லிஸ்டை தயாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடைக்கோ, சுப்பர்மார்க்கட்டிற்கோ செல்லும் போது விரைவாக உங்களால் கொள்வனவு செய்ய முடியும். என்ன பொருள் வாங்குவது? என்று யோசித்துக் கொண்டு அங்கே அதிக நேரம் செலவிடத் தேவையில்லை.

உங்களதும், பிறரினதும் பாதுகாப்புக் கருதி மறக்காமல் மருத்துவ முகமூடியை அணிந்து வெளியில் செல்லவும்.உங்கள் குடும்பத்திலிருந்து ஒரு நபர் மாத்திரமே கொள்வனவு செய்வதற்காக வெளியில் செல்லவும்.

வரிசையில் நிற்கும் போது 1m / 2m தூர இடைவெளியை பேணவும்.


அத்தியவசியமான பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்யுங்கள். அனைவரும் தேவைக்கு உரிய பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் போது அனைவருக்கும் போதுமானளவு பொருட்களை கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும்.

ஷாப்பிங் முடிந்து வீட்டிற்கு வந்த உடனே உங்கள் கைகளை உடனே சவர்க்காரமிட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அல்லது குளியுங்கள்.வீட்டிற்கு கொள்வனவு செய்த பொருட்களை கொண்டு வந்ததுதம் அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு முன்னர் நன்றாக ஓடும் நீரில் கழுவிக் கொள்ளுங்கள்.முடியுமானவரை ஒன்லைன் வணிக சேவையினை பயன்படுத்துங்கள். இது முடியுமானளவு நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தை குறைக்கும். மேலும் நோய்க்காவியாக செயற்படக் கூடிய அபாயத்தையும் தவிர்க்கும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments