ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்

0
1265

(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது)

கனவு காண்பதற்கே
கஞ்சப்படும் உலகினிலே
தினமும்
தன் சிறகை விரித்து
கனவு காண்கிறது இவ் ஊர்க்குருவி..

‘கனவுகள் என்றும் கலையாது
தன் பயணம்
இலக்கை நோக்கியதாக இருக்கும் போது’
என்கிறது அக்குருவி…

உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி
எப்போதும் பருந்தாகாது
எனக் கூறுபவர்களுக்கு
செவிதாழ்த்தாமல்
இருந்தாலே போதும்
உயரச்சென்று உச்சம் தொடலாம்
என்கிறது அக்குருவி..

உன்னிடம் உள்ளவற்றிற்கு
ஏற்றாற்போல்
கனவு காண் எனக்கூறும் சமூகத்தில்
என் தன்நம்பிக்கை
மலையளவு அகன்றது எனக்கூறி
முயற்சி செய்தால்
பல தடைகள் கடக்கலாம்
என்கிறது அக்குருவி..

தோல்விகள் என்னை துரத்தினாலும்
அவமானங்கள் என்னை தொற்றிக்கொண்டாலும்
என்றும் என் பயணம்
என் இலக்கை நோக்கியதே
என்கிறது அக்குருவி..

தன் இலக்கை மறந்து
கரைபுரண்டோடும் காலத்தில்
சிக்கிய
ஓர் துகளாய் வாழ்வதை விட
என் ஆன்மா விரும்பும்
இலக்கை அடைய
தன் சிறகை விரிக்கும்
ஊர்க்குருவிகளுக்கு தோழனாய் என் வாழ்த்து…

‘ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்’

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments