எந்த வயதில் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..?

0
1522
வாழ்நாள் முழுவதும் ஓடி உழைத்த மனிதன் தனது களைப்பை போக்கிக் கொள்வதற்கு தேர்ந்தெடுத்த ஒரு ஓடம் தான் ஓய்வு. இயந்திரங்களை போல உழைத்தாலும் கடைசியில் நாம் நோக்கி செல்லும் பாதையும் ஓய்வு தான். 

ஆனால், இந்த ஓய்வில் பல வகை உண்டு. சிலர் நீண்ட நேரம் ஓய்வெடுப்பார்கள். சிலர் மிக குறைந்த நேரம் மட்டுமே ஓய்வெடுப்பார்கள். பொதுவாக தூங்குவதற்கென்று அறிவியல் சார்ந்த எல்லையுண்டு. அதாவது ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தூக்கம் உள்ளது. அந்த அளவில் தூங்கினால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கலாம். இல்லையென்றால் பலவித விளைவுகள் ஏற்படும். அவை என்னென்ன என்பதை பற்றி இனி அறிவோம். 

தூக்கமில்லையா? இன்று பலர் நிம்மதியான தூக்கமில்லாமல் தான் அவதிப்படுகின்றனர். காரணம் யாராக இருந்தாலும் சரியான அளவு தூக்கம் கட்டாயம் தேவைப்படும். அரைகுறையான தூக்கம் உங்களின் உடலை மிக மோசமாக பாதிக்க கூடும். உடல் நலத்தையும், உளவியல் ஆரோக்கியதையும் பெரிதாக பாதிக்க கூடும். 

இவ்வளவு பாதிப்பா..? 
ஒவ்வொரு வயதினருக்கும் தூக்கத்தின் அளவு வேறுபடும். இதில் மாற்றம் ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் இவைதான். 
மன அழுத்தம், ஹார்மோன் சமநிலை சீர்கேடு அடைதல், இதய நோய்கள், பார்வை குறைபாடு, சர்க்கரை நோய், பித்து பிடித்தல், உடல் எடை கூடுதல்,

20181205_093256
பிறந்த குழந்தைகள் ஏற்கனவே தாயின் கருவறையில் அதிக நேரம் தூங்கி கொண்டே இருந்திருக்கும். அதை போன்று தான் பிறந்த சில மாதங்கள் வரை நிம்மதியாக அந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்க வேண்டும். பிறந்தது முதல் 3 மாதங்கள் வரை 14 முதல்17 மணி நேரம் வரை குழந்தை தூங்க வேண்டும். இல்லையென்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு, உடல் நல குறைபாடுகள் குழந்தைக்கு ஏற்படும். 

4 முதல் 11 மாத குழந்தைக்கு, குழந்தை பிறந்து சிறிது காலம் சென்ற பிறகு, அந்த குழ்நதையின் தூக்க நேரங்கள் சற்று மாறுபடும். பிறந்த 4 மாதத்திற்கு பிறகு குழந்தை 12 முதல்15 மணி நேரம் வரை தூங்க வேண்டும். இந்த தூக்க நேரம் 12 மாதம் வரை இதே நிலையில் இருக்க வேண்டும். 

1 முதல் 5 வயது வரையிலான குழந்தை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கும். 1 முதல் 2 வயது வரை அந்த குழந்தை 11 முதல் 14 மணி நேரம் வரை 
ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். 
இந்த வயதில் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்து கொடுமை செய்யாதீர்கள்.

20181205_085318_0001
3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் 10 முதல்13 மணி நேரம் வரை தூங்க வேண்டும். இதில் குறைவு இருக்க கூடாது. 

6 முதல்13 வயதினருக்கு தூக்க நேரம் என்ன..? இப்போது குழந்தை பருவத்தில் இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறியுள்ளனர். அதிக விளையாட்டுத்தனம் நிறைந்த வயது இது. எவ்வளவு நேரம் விளையாடுகிறார்களோ அவ்வளவு நேரம் அவர்கள் தூங்க வேண்டும். 

6 முதல் 13 வயதுள்ளவர்கள் 9 முதல் 11 மணி நேரம் வரை தூங்க வேண்டும். 

14 முதல் 17 வயதுள்ளவர்களுக்கு பொதுவாக இந்த வயதை நாம் “டீன் ஏஜ்” பருவம் என்று சொல்வோம். எண்ணற்ற யோசனைகள் 
வரக்கூடிய வயது தான் இந்த வயது. 
அதிக சிந்தனையும், அதிக உடல் உழைப்பையும் இந்த வயதில் எடுத்துக் கொள்வார்கள். எனவே இவர்கள் 
8 முதல் 10 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். 

துடிப்பான வயது 18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மிகவும் துடிப்பானவர்களாக இருப்பார்கள். இந்த வயதில் அதிக தூக்கம் தேவை கிடையாது. மாறாக ஆழ்ந்த சிந்தனையும், அறிவியல் சார்ந்த பார்வையும் மேலோங்க ஆரம்பிக்கும். 
எனவே, இவர்கள் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கினாலே போதுமானது. 

துடிப்பான வயதுடனே கடமைகளும் சேர தொடங்கும் வயது தான் 25, இந்த வயதிற்கு பிறகுள்ள அடுத்த 30 வருடங்கள். 
பாதி வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட நாம் அடுத்த பாதி வாழ்வை நிம்மதியாக வாழ வேண்டும்.

20181205_085402_0001

26 வயது முதல் 64 வயது வரை 7 முதல் 9 மணி நேர தூக்கமே சிறந்தது. இந்த அளவு அதிகரிக்கவும் கூடாது, குறையவும் கூடாது. மீறினால் எளிதில் நோய்கள் தாக்க கூடும்.

மீண்டும் குழந்தை பருவமே. ஒரு வழியாக நமது வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டிய வயதை நாம் எட்டி விட்டோம். இந்த வயதில் நாம் மீண்டும் ஒரு குழந்தையாகவே மாறி விடுவோம். ஒரு அழகிய மாற்றத்திற்கான வயது தான் இது. 

65 வயதுக்கு மேல் 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். காலம் இவ்வளவு அழகானதா? காலங்களை நாம் சற்று திரும்பி பார்க்கும் போது பல்வேறு நினைவுகள் நமக்கு பரிசாகவும், பிரம்மிப்பாகவும் இருக்கும். 
அந்த நினைவுகள் அனைத்துமே இன்பம், துன்பம் என ஒரு வித கலவையாகவே இருக்கும். இவை அனைத்துமே நமது வாழ்கையின் இனிமையான பரிசாகவே நாம் முதுமையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Source : வலைப்பகிர்வு
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments