எனை ஈர்த்தவை

1
1417

மனித இனம் தோன்றிய நாள் முதலே மனிதன் இன்னொரு மனிதனை போட்டியாக நினைக்கும் மன நிலையை வளர்த்து விட்டான் போலிருக்கின்றது…
இன்று இணையம் சமூக வலைத்தளங்கள் என மாறிவிட்ட உலகில் மனிதனின் மனிதத்தன்மையும் அடியோடு மாறி விட்டது அந்த காலத்தில் எதிரியோ நண்பனோ எல்லாருமே எதிரிலே இருந்தனர் இன்று நமக்கு முன்னுக்கு இருக்குரது யாருன்னு நமக்கே தெரியுது இல்ல……

பக்கத்துல இருக்குரவன்ட முகம் பார்த்து பேச கூச்சம் ஆனா பாகிஸ்தான்ல இருக்குர யாரோ ஒருத்தன்கிட்ட மணிக்கணக்குல வீடியோ கோல் பேசுரோம்
சமூக மயமாக்கம் எனும் பெயர்ல வன்முறைகள் அதிகரிக்குரதுதான் தலைப்பு செய்தியா வந்துட்டு இருக்கு

எட்டி பிடித்து விட்டோம் நிலவை தொட்டும் விட்டோம் தொழிநுட்ப உலகு என மனிதன் ஆயிரம்தான் கத்தி கூப்பாடு போட்டாலும் இவையெல்லாம் ஒரு சாதனையாய் என்னை இம்மியளவும் ஈர்த்ததில்லை காரணம் மனித வலுவிற்கு பதிலாய் பொறிமுறை வலுவை பயன்படுத்தும் இவ்வுலகில் இவை சாதாரணமானதே

ஆனால் வெறும் மனித சக்தியை மட்டுமே பயன்படுத்திய முற்காலத்தின் படைப்புக்கள்தான் என்னை பிரமிக்கவைக்கின்றன
கவலைக்குரிய விடயம் யாதெனில் இக்காலத்திலுள்ள தொழில்நுட்பங்களாலேயே அக்கால படைப்புக்களின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முடியாது உள்ளமையே….

எகிப்திய பிரமிட்டுக்கள்:- பிணவறைகள் என இலகுவாய் கூற முடிந்தாலும் அதன் தொழிநுட்பங்களை பார்த்தால் ஏன் எனும் கேள்வி பாமரனுக்கு கூட தோன்றி மறையும் தொன் நிறையை கொண்ட அக்கற்களை வெறும் மானிடரின் உதவியுடன் கட்டி முடித்தது மெய் சிலிர்க்க வைக்கின்றது

பாலைவனத்தில் இருந்தாலும் பிரமிட்டுக்களின் உட்பகுதி குளுமையை தருகின்றது எவ்வாறு??

பெர்மூடா முக்கோணம் பல ஆராய்ச்சிகளை தாண்டி இன்று Black hole aa என்ற கோணத்தில் சுழல்கின்றது அங்கு என்னதான் மர்மம் உள்ளது??

தஞ்சை பெரிய கோவில்??

மாயன் அறிவியல்??

இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்
ஆனால் பதில்கள்தான் கேள்விக்குறியாய்????

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

True…