என்னவனுக்கு ஒரு கவிதை!!!!..

2
20683
72fa0cb35f51aa08d8c08e987479def1-2-7f075a4b

 

 

 

*உனக்காக  என் கவிதை……*

❤️❤️

என்னவனே என்னோடு பேசி சில நாட்கள்  ஆகி விட்டது…..

என் மனமும்  என் செவிகளும் தவிக்கிறது  உன் குரல் கேட்க…..

உன் அழைப்பை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் நான்….

இரவில் உறக்கம் இல்லாமல்….

பகலில் நிம்மதி  இல்லாமல்….

 

நான்  போனை கையில்  எடுத்தவுடன் நீ அனுப்பும் குறும் தகவலைத் தான் தேடுகிறது என் கண்கள்…… 

நீ குறும் தகவல் அனுப்பவில்லையென்றால்…. 

ஏமாந்தது என் கண்கள் மட்டும் அல்ல….

நானும்  தான்…..

 

என் நினைவு எப்பவும் உன்னையே சுற்றுதடா…. 

ஆனால்,

கண் பார்க்கும் தூரத்தில் நீ இல்லையடா….

 

நீ அழைப்பாய் என தவிக்கும்  என் மனதிற்கு மட்டுமே தெரியும்….

நீ பேசாமல்  இருக்கும் போது படும் அவஸ்தைகள்……

 

உன் குரல் கேட்காமல்,

உன்னோடு பேசாமல் 

நான் தவிக்கின்ற தவிப்பை சொல்ல வார்த்தைகளே இல்லையே என் அன்பே….

 

உன்னையும் உன் நினைவுகளையும் நான் மறக்கவில்லை….

உனக்காக நான்  இருக்கின்றேன்  என்பதை நீ மறந்து விடாதே….

 

*என்றும் உன் அன்பின் இவள்….* ❤️❤️

 

 

 

 

 

4 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shafiya Cader
Shafiya Cader
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சண்டையில்லாமல் இருந்தாலே சரிதான் சகோதரி🤣

MJ
MJ
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice