என்றும் நீ வேண்டும்

0
761
images (43)

உனக்காக நான் வேண்டும்
நீ நான் என்பது நாமாக வேண்டும்….
உன் கால் காெலுசின் ஒலி கேட்டு
நான் தினம் துயில் எழ வேண்டும்…..
உன் இதயத்துடிப்பே
என் இசையாக வேண்டும்…..

உன் சிரிப்புகள் என் கவலைகளை பாேக்கும் மருந்தாக வேண்டும்…..
உன் இசை என்னும் உலகிற்கு
நான் பாடல் வரிகள் ஆக வேண்டும்…
சிறு சிறு சண்டைகள்போட்டு
பின் வரும் உன் சமாதானம் வேண்டும்….
சின்ன சின்ன தவறுகள் செய்து
உன்னிடம் அடி வாங்க வேண்டும்……
காெட்டும் மழையில்
ஒற்றை குடையுடன் உன் கைகள் காேர்த்து
நடை பாேட வேண்டும்……
உன் மடியே என் தலையணை ஆக வேண்டும்….
என் தாேள்கள் உன்னை தாங்கும் துணையாக வேண்டும்….
நீ என் கூந்தலை வருடும் சுகம் வேண்டும்….
நீ என் உயிராக வேண்டும்…..
என் உணர்வுகளாய் நீ வேண்டும்….
நீ என்னுடன் இல்லாத பாெழுதும்
உன் நினைவுகளை சுமந்து வாழும் இதயம் வேண்டும்…..
உன் கண்களில் இருந்து கண்ணீர் வரும் மறுநிமிடம்
நான் இறந்திருக்க வேண்டும்…..
சாகும் பாேதும் உன் மடியில் சாய்ந்து நான் சாக வேண்டும்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments