எறும்புத்தாவரங்கள் (Myrmecophiles)

0
779

 

 

 

 

உயிரியலில் பிற உயிரினங்களுடன் எறும்புகளுக்கு இருக்கும் தொடர்பினைக்குறித்த பிரிவு, கிரேக்க மொழியில் ‘ எறும்பின் விருப்பம் ‘ எனப்பொருள்படும். மிர்மிகோஃபில்லி (yrmecophily ) எனப்படும்.

ஃபோர்மிசிடே என்னும் பிரிவின் கீழ் வரும் எறும்புகளில் 10,000 வகைகளும், கிட்டத்தட்ட 22,000 சிற்றினங்களும் இருக்கின்றன.

தாவரங்களுக்கும் எறும்புகளுக்கும் உள்ள, இணைந்துவாழும் இருதரப்பிற்கும் உபயோகமான உறவு (Mutualisitic relationship) மிகச்சிறப்பானது. பயறு வகைத்தாவரங்கள், ஆர்க்கிடுகள், ஆமணக்குச்செடியின் யுஃபோர்பியேசியே (Leguminosae, Orchidaceae and Euphorbiaceae,) குடும்பம் ஆகியவை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தாவரங்கள் எறும்புகளுடன் நெருங்கிய உறவிலுள்ளவை.
இத்தாவரங்கள் எறும்புகளுக்கு தங்குமிடம், உணவு போன்றவற்றை அளிக்கிறது பதிலுக்கு எறும்புகள் தாவரங்களை உண்ண வரும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல், விதைபரவல் (myrmecochory), மகரந்தச்சேர்க்கை தாவரக்கழிவுகளை சுத்தம் செய்தல், சத்துக்களை அளித்தல், நோயிலிருந்து காத்தல் என பல வகைகளிலும் உதவுகின்றன.


மிர்மிகொஃபைட்ஸ் (myrmecophytes) எனப்படும் இவ்வகையான எறும்புகளுடன் இணைந்து வாழும் தாவரங்கள் டொமேசியா (domatia,) எனப்படும் தங்குமிடங்களை எறும்புகளுக்காக கொண்டிருக்கும். உள்ளே வெற்றிடங்கள் உள்ள கூரிய முட்கள், வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் உட்புறம், சுருண்ட இலைகளின் ஓரங்கள் ஆகியவற்றில் எறும்புகள் முட்டைகளை இட்டு பாதுகாப்பாக்க தங்கிக்கொள்ளும்.

20 குடும்பங்களைச்சேர்ந்த தாவரங்கள் எறும்புகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை இலைக்காம்புகளில், மகரந்தத்துகள்களில், இலைநுனிகளில், தண்டுகளில் சேகரித்து வைத்திருக்கும், இன்னீர் சுரப்பிகளை மலருக்கு வெளியே (Extrafloral nectaries) எறும்புகளுக்கென உருவாக்கி வைத்திருக்கும் 66 தாவரக்குடும்பங்களும் உள்ளன
பல வகையான பழமரங்கள் எறும்புகளை பழங்கள் இருக்கும் காலத்தில் மட்டும் மட்டும் கூட வைத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளும். பிசின் போன்ற திரவத்தை எறும்புகளுக்காக சுரக்கும் மாமரங்களிலும், வாசனையாக சுவையுடனிருக்கும் மகரந்தத்துகள்களையுடைய மலர்களுடன் கூடிய கொய்யா மரங்களிலும் எப்போதும் எறும்புகள் இருப்பதைக்காணலாம். இன்னும் சில மரங்களில் உள்ள எறும்புகள் தாவரத்தை உண்ண வரும் விலங்குகளையும் பெரிய பூச்சிகளையும் கடிக்கவும், கடித்த இடத்தில் ஃபார்மிக் அமிலத்தை துப்பி எரிச்சலேற்படுத்தி அவற்றை விரட்டவும் கூட செய்யும்.

சில எறும்புகள் இலைகளில் ஏற்படும் பூஞ்சைத்தொற்றினை( Fungal infections) பூஞ்சை இழைகளை (Mycelia) உண்ணுவதின் மூலம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்துகின்றன.

Facts

மிர்மிகாலஜி (Myrmecology) என்பது பூச்சியியலில், எறும்புகள் குறித்த ஒரு கிளைத்துறை மிர்மெகோஃபைல் (Myrmecophile) என்னும் சொல்லானது எறும்புடன் இப்படியான தொடர்பிலிருக்கும் பிற உயிரினங்கள் அனைத்தையும் குறிப்பிடுகின்றது.

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments